திபெத்தில் சூரிய ஒளி ஆற்றல் மின்னாக்கிகள்
cri
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், பல்வகை சூரிய ஒளி ஆற்றல் மின்சார வசதிகளின் மொத்த ஆற்றல், 9 ஆயிரம் கிலோவாட் ஆகும். இப்பிரதேசத்தின் சூரிய ஒளி ஆற்றல் மின்னாக்கிகளின் மொத்த ஆற்றல், நாடளவில் முதலாவது இடம் வகிக்கின்றது.
திபெத், சீனாவில் சூரிய ஒளி ஆற்றலை மிக அதிகமாக பெறும் பிரதேசமாகும். ஆண்டுதோறும் சராசரியாக மூவாயிரம் மணிக்கு மேலான சூரிய ஒளி அங்கு வீசுகின்றது. சூரிய ஒளி ஆற்றல் மின்பிறப்பு நிலையத்தைக் கட்டுவதில் பெரும் மேம்பாடு திபெத்துக்கு உண்டு. தற்போது, திபெத்தில் 400 பல்வகை சூரிய ஒளி ஆற்றல் மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள மின் ஆற்றல் பிரச்சினை இதனால் தீர்க்கப்பட்டு விட்டது.
|
|