கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.
ராஜா......கடந்த இரண்டு முறைகளில் நூடல்ஸ் சமைப்பது பற்றி நண்பர்களுக்கு விளக்கினோம். இந்த முறை எந்த வகை நூடலஸ் விவரிப்பீர்கள்.
கலை.......இன்றைக்கு நூடலஸ் பற்றி சொல்வதற்கு பதிலாக கோழிக் கறி சமைப்பது பற்றி விளக்கி கூறுகின்றேன்.
ராஜா.....எந்த வகை கோழிக் கறி? தமிழர்களுக்கு பொதுவாக அமைவ உணவு பிடிக்காது.
கலை......கவலைப்படாதீர்கள். கோழி பொதுவாக உலகின் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கறிதானே.
ராஜா.......அப்படியானால் கோழி சமைப்பதற்கு தேவையான பொருட்களை சொல்லுங்கள்.
கலை........கோழி ஒன்று, காய்ந்த காளான் 7, இஞ்சி, புண்டு, நல்லெண்ணெய், சோயா சாஸ், மஞ்சள் மது சர்க்கரை 4 தேநீர் கரண்டி, உப்பு தேவையான அளவில்.
ராஜா........ தேவையான பொருட்களை நான் மீண்டும் சொல்லட்டுமா?
கலை.......சொல்லுங்கள்.
ராஜா........கோழி ஒன்று, காய்ந்த காளாங் 7, இஞ்சி, புண்டு, நல்லெண்ணெய், சோயா சோஸ், மஞ்சல் மது அல்லது அசிங்கம் நீக்கும் மது போன்ற பொருள், சர்க்கரை 4 தேநீர் கரண்டி உப்பு தேவையான அளவு அவ்வளவு தானா?
கலை......பொருட்களை சேகரிப்பது கடினமல்ல. சமைப்பது தான் கொஞ்சம் கஷ்டம். இந்த கோழியை வாணலியில் போட்டு பொறிக்க வில்லை. தீ அடுப்பின் மேல் வைத்து வாட்ட வில்லை. இதை மைக் ரோவேவ் அடுப்பில் வைத்து சமைக்க வேண்டும்.
ராஜா........இது எனக்கு பயமாக உள்ளது.
கலை......என்ன பயம். தாராளமாக நான் சொன்னதை பின்பற்றி சமைக்க பாருங்கள்.
ராஜா.......சரி முயற்சி செய்வேன்.
கலை........முதலில் கோழியை சுத்தம் செய்வதற்கு முன் காய்ந்த காளானை வென்னீரில் போட வேண்டும். அரை மணி நேரம் நன்றாக ஊறிய பின் இந்த காளான் பக்குவமாகிவிடும். பச்சை காளானாக இருந்தால் சுத்தமாக கழுவினால் போதும்.
ராஜா.......தமிவ் நாட்டிலே பச்சை காளான் காய்ந்த காளாந் இரண்டுமே கிடைக்கும். அது கிடைக்கா விட்டால் ருசி பாதிக்கப்படுமா?
கலை......கண்டிப்பாக கோழி சுவை பாதிக்கப்படும். முயற்சி செய்யுங்கள்.
ராஜா......கோழி எப்படி சமைப்பது சொல்லுங்கள்.
கலை.......சரி, முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்த பின் பெரிய துண்டு துண்டாக வெட்டி தட்டில் போடுங்கள். சுத்தம் செய்த காளானை பெரிய துண்டு துண்டாக நறுக்குங்கள். அப்புறம் நல்லெண்ணெய் பாத்திரத்தில் ஊற்றி மைக்ரோ அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்க வேண்டும். அப்புறம், கோழித் துண்டுகளையும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் நல்லெண்ணெய் இருக்கின்ற பாத்திரத்தில் போடுங்கள்.
ராஜா........எத்தனை நிமிடம் இஞ்சி பூண்டு கலந்த இந்த கோழி கறி சமைக்க வேண்டும்?
கலை........5 நிமிடம் மைக்ரோ அடுப்பில் சமைக்க வேண்டும்.
ராஜா......அப்புறம் என்ன செய்ய வேண்டும்.
கலை......இப்போது நன்கு ஊறிய காளான்களை இரண்டு துண்டுகளாக நறுக்கி நடுவில் சோயா சோஸ் கலந்து கொள்ள வேண்டும்.
ராஜா.......ஏற்கனவே மைக்ரோ அடுப்பில் வேகவைக்கப்பட்ட கோழி இஞ்சி புண்டு ஆகியவற்றை இப்போது காளான்களுடன் கலந்து பிசைய வேண்டுமா?
கலை......ஆமாம். இப்போது கோழி, காளான் துண்டுகள், இஞ்சி பூண்டு சர்க்கரை அனைத்தையும் ஒன்று சேர்த்து பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றுங்கள்.
ராஜா........அப்புறம் மைக்ரோ அடுப்பில் எத்தனை நிமிடம் சமைக்க வேண்டும்?
கலை......அப்போது உயர் எரியளவில் 20 நிமிடம் வேகவைக்க வேண்டும். அதற்கு பின் பாத்திரத்திலிருந்து கோழி வாசனை நன்றாக வெளியே வீசும் உங்களுத்தும் உண்ணும் ஆசை அதிகரிக்கும். இந்த வேளையில் நறுக்கிய கீரையை கோழியின் மேல் தூவுங்கள்.
ராஜா........சீன வகை கோழி காளான் கறி தயாரகவிட்டது.
நண்பர்களே நிகழ்ச்சியை கேட்ட பின் நீங்கள் சமைத்து ருசி பாருங்கள். ஒரு வரி- எழுதுங்கள்.
கலை.......நேயர்களே இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
ராஜா......அடுத்த முறை மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.
|