• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-29 11:20:47    
Ban Jin விழா

cri

சீன வரலாற்றில் கடைசி பிரபுத்துவ வம்சமான சிங் வம்சத்தை மஞ்சு இனம் நிறுவியது. சீனாவை ஆட்சி புரிந்த 200 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், கட்டிடக்கலை, இலக்கியம், ஓவியம், ஆடை, மொழி முதலியவற்றில் மஞ்சு இன மக்கள் தனித்தன்மை வாய்ந்த புத்தாக்கம் செய்துள்ளனர். ஏராளமான பண்பாட்டு மரபு செல்வங்களை அவர்கள் விட்டு விட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட இணைய தள நண்பர்கள் பெரும்பாலோர், இளைஞர்கள். அவர்கள் அனைவரும் மஞ்சு இன பண்பாட்டை நேசிக்கின்றனர். தவிரவும், இக்கூட்டத்தின் தலைப்பு, மஞ்சு இனப் பண்பாட்டின் பாதுகாப்பும் வளர்ச்சியும் என அவர்கள் கலந்தாய்வு மூலம் முடிவுக்கு வந்தனர். "மங்கள மஞ்சு இன" இணையத் தளத்தின் தலைவரான லியு பிங் மஞ்சு இனப் பண்பாடு பற்றி கருத்து தெரிவித்ததாவது

"மஞ்சு இனப் பண்பாட்டில் பலவற்றை நாங்கள் கையேற்று வெளிக் கொணர வேண்டும். சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில், மஞ்சு இன மக்களுக்கு சொந்த எழுத்துகள் உள்ளன. இது, அற்புதமாக இருக்கும். மஞ்சு இன ஆடைகளில், Qi Pao என்னும் ஒரு வகை நீண்ட சட்டை, அசல் உதாரணமாகத் திகழ்கின்றது. இன்றைய காலத்தில், நாங்கள் இச்சட்டையை நிலைநிறுத்த வேண்டும். வடிவத்தில், நிறத்தில் இதை வளர்க்க வேண்டும். இதனை, நவீன வாழ்க்கையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

நீண்டகாலமாகவே ஹான் இன மக்களுடன் கலந்து வசிப்பதினால், இப்போது மிகப் பெரும்பான்மையினர், மஞ்சு இன மொழியைப் பேச முடியாமல் போயிற்று. ஹான் இன மொழியையும் ஹான் இன எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். வாழ்க்கை பழக்க வழக்கங்களில், அவர்களுக்கும் ஹான் இன மக்களுக்குமிடையில் வேறுபாடில்லை. எனவே, தங்களது இனத்துக்கே உரிய பழக்க வழக்கங்கள் பலவற்றை அவர்கள் மறந்து விட்டனர். தலைசிறந்த தேசிய இனப் பண்பாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். சீராக்கப்பட வேண்டும். பெய்சிங்கின் தென் பகுதியின் ஹாய் பெய் மாநிலத்து போ டின் நகரத்திலிருந்து வந்த இணையத் தள நண்பர் இர்கனஜிங்ரு. செங் வே கூறியதாவது:

"சிறு வயதிலிருந்தே, நான் வரலாற்றின் மீது அக்கறை கொண்டுள்ளேன். வரலாற்றைப் படிப்பதன் மூலம், தேசிய இனப் பண்பாடு பற்றிய அறிவை அதிகமாக தெரிந்து கொண்டுள்ளேன்" என்றார்.

தமது தாய் தைத்த ஒரு தேசிய இன ஆடையை அவர் அணிந்திருந்தார். தேசிய இன விழா நாளில் தாம் இவ்வாடையை அணியத் தவறுவதில்லை என்றும் அவர் சொன்னார்.