• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-28 14:22:27    
நோபல் பரிசு பெற்ற 5 அந்நிய அறிவியலாளர்கள்

cri
உயிர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற 5 அந்நிய அறிவியலாளர்கள் சீனப் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது பெய்சிங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் "உயிர் அறிவியலும் மனித உடல் நலமும்" என்ற தலைப்பில் சீன சகாக்களுடன் இவர்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். இப்போது இது பற்றி கூறுகிறோம்.

நோபல் பரிசு பெற்றவர்களின் ஆய்வுத் துறை சிறப்பு மிக்கது. அவர்கள் பெற்ற கனிகளான ஆய்வு முடிவுகள் மற்றும் கருத்துகளை பொது மக்கள் புரிந்து கொள்வது சிரமம். ஆனால் இம்முறை பெய்சிங்கில் சொற்பொழிவாற்றிய இந்த 5 அறிவியலாளர்கள் தமது பரிசு கனிகளை மனிதரின் தீரா நோய்களுடன் இணைத்து பேசியுள்ளனர்.இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையிலான இடைவெளி குறுகிவிட்டது.

"ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் இதய ரத்த குழாய் நோயை தடுத்து சிகிச்சை செய்ய முடியும்"என்ற கருத்தை டாக்டர் லூயிஸ் ஜே இஞ்ஞரோ முன்மொழிந்துள்ளார். அவரும் டாக்டர் பஃறிட் ஸ்ரீபிரெட் முராட்டும் இதய ரத்த குழாய்களில் நைட்ரஜன் MONOIXIDE ஆற்றிய தனிப்பட்ட பங்கைக் கூட்டாக கண்டுபிடித்ததால்1998ல் மருத்துவ மற்றும் உடலியல் துறையில் நோபல் பரிசை பெற்றனர். இந்தக் கண்டுபிடிப்பை எவ்வாறு பலமான ஆயுதமாக்கி உலகளவில் இறப்பு விகிதம் அதிகமான இதய ரத்தக் குழாய் நோய்களைச் சமாளிப்பது என்பதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

நைட்ரஜன் உள் உடலைப் பாதுகாத்து இதய ரத்த குழாய் நோய்கள் உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போரிடும் காவல் படையினர் போன்றது. அதன் அளவு குறைந்தால் இதய ரத்த குழாய் நோய்கள் நீரிழிவு நோய் -----முதலிய நோய்கள் ஏற்படும். ஆகையால் உடம்பிலுள்ள நைட்ரஜன் அளவை உத்தரவாதம் செய்தால் இத்தகைய நோய்களைத் தடுக்கவோ குணப்படுத்தவோ முடியும். இஞ்ஞாரோ இந்நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்து குறிப்பேட்டையும் எழுதித் தன்தார்.

"நீங்கள் உண்ணும் பழ வகைகளும் காய்கறிகளும் எவ்வளவு அதிகமாக இருக்கின்றவோ அவ்வளவுக்கு உங்கள் உடலில் ABRI OXIDENTS அளவு அதிகமாக இருக்கும்.-------------AAA ஆக்ஸிடேஷன் எனப்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் பாதகமான விளைவிலருந்து உடல் செல்களை பாதுகாப்பை........உயிரக இணைவு எதிர்ப்பு பொருட்கள் அவ்வளவுக்கு குறைவாக சீர்குலைக்கப்படும். மேலும் மீன்கள், கறுப்பு சாக்ரெட், திராட்சை மது, பல்வகை பழச் சாறுகள் ஆகியவையும் நல்ல உணவாகும். எனெனில் அவற்றில் உயிரக இணைவு எதிர்ப்பு பொருட்களும் அதிகம்"என்றார்.

இக்ரோனாவின் சொற்பொழிவு சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சி சியான் லின்னுக்கு புதிய அறிவு புகட்டியுள்ளது. இதய ரத்த குழாய் நோய்களில் நைட்ரஜன் பங்கை வெளியாக்கியமை தாம் ஈடுபட்டிருக்கும் சத்துணவியல் ஆராய்ய்சிக்கு தத்துவ அடிப்படையை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக மனிதரின் சராசரி ஆயுள் பெரிதும் பெருகியுள்ளது. உயிர் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆற்றிய பெரும் பங்குடன் இது முக்கிய தொடர்புடையது. இவர்களுடைய ஆய்வுக் கணிகள் இன்றைய உலகின் மிக உயர் கலையியல் நுட்பத்தைப் பிரதிபலிக்கின்றன என்று சீன அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இது வரையிலும் சீன அறிவியலாளர்கள் இத்துறையில் நோபல் பரிசு பெறவில்லை என்பது மனவருத்தமான ஒன்று.

இருப்பினும் உயிர் அறிவியல் மற்றும் உயிரியல் தொழில் நுட்ப துறையில் சீன அரசு பெரும் முதலீடு செய்து சில முன்னேற்றமும் கண்டுள்ளது. மிகவும் முன்னேறிய அறிவியல் துறையில் சீனாவுக்கும் உலகின் பல்வேறு நாடுகளுக்குமிடை இடைவெளி குறைந்து வருவதாக சீன அறிவியல் கழகத்தின் உறுப்பினர் சாங் யா பின் கூறியுள்ளார்.

"கடந்த சில ஆண்டுகளில் உயிர் அறிவியல் மற்றும் உயிரியல் தொழில் நட்ப துறையில் சீனாவின் படைப்பாற்றல் புத்தாக்க ஆற்றல் பெரிதும் உயர்ந்துள்ளது. உயிரியல் தொழில் நுட்ப தனிக்காப்புரிமை பொறுத்தவரை 2002ல் சீனாவின் தனிக்காப்புரிமை விண்ணப்ப எண்ணிக்கை வளரும் நாடுகளில் இரண்டாவது இடம் வகித்துள்ளது"என்றார்.

அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக சர்வதேச மனித மரபணுத் தொகுதி திட்ட ஆராய்ச்சியில் சீனா சோந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மனிதக் குல மரபணுத் தொகுதி செயல்முறையில் அளவீட்டுப் பணியில் 1 விழுக்காட்டை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சீனாவின் மரபணுத் தொகுதி ஆராய்ச்சி பணி உலக மரபணுத்தொகுதி ஆராய்ச்சி பணியுடன் ஒத்துப் போவதை இது குறிக்கின்றது. உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் சுரப்பி நாள புற்று நோய் போன்ற பல நோய்கள் மரபணுக்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொருவருக்கும் மரபணுத் தொகுதியை தீர்மானிக்க முடியுமானால் குறிப்பிட்டதோர் நோய் வரும் ஆபத்து எவ்வளவு அதிகம் என்பதை அவர் பிறக்கும் போதே தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு பயன் தரும் முறையில் அந்த நோயைத் தடுக்க முடியும் என்று நீண்டகாலமாக மனிதக்குல மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் யூ சியான் கருதுகிறார். அவர் கூறியதாவது

"ஒருவரின் மரபணு தொகுதியை தீர்மானிப்பதற்கு 1984ல் 300 கோடி அமெரிக்க டாலரும் 2004ல் 3 கோடி அமெரிக்க டாலரும் 2006ல் 15 லட்சம் அமெரிக்க டாலரும் செலவழிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் இதற்கு ஆயிரம் அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும் என்ற நிலையை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும்"என்றார்.

தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பொது மக்களுக்கு மரபணுத் தொகுதியை தீர்மானிப்பதற்கான சேவையை வழங்க ஆய்வுக்கூடங்கள் உண்டு. அடுத்த 5-10 ஆண்டுகளில் சீனாவில் இது தொடர்பான அலுவல் தொடங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது "என்று இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அமெரிக்க பேராசிரியர் எர்னஸ்ட் பியூட்லர் கூறியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் அறிவியலாளர் ராபர்ட் ஸ்ரீபர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கடந்த சில ஆண்டுகளில் உயிர் அறிவியல் துறையில் சீனா நிகழ்த்தியுள்ள சாதனைகளைத் தாம் கவனித்துள்ளதாக கூறினார்."அவர் மேலும் கூறுகிறார்

"கணிசமான அளவு காலத்தில் உயிர் அறிவியல் மற்றும் உயிரியல் தொழில் நுட்ப துறையில் சீனா ஒப்பீட்டளவில் பலவீணமான காலக் கட்டத்தில் உள்ளது. பிற நாடுகளிடமிருந்து தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்வது அதற்கு தேவைப்பட்டது. ஆனால் இந்நிலை கடந்து விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் சீனா மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது சீன அறிவியல் ஆய்வாளர்கள் மிக முன்னேறிய ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார்கள்"என்றார் அவர்.

அடுத்த 15-20 ஆண்டுகளில் சீனா உலக உயிரியல் தொழில் நுட்ப வல்லரசு அணிகளில் காலடி எடுக்க விருப்பதாகவும் சில சீன அந்நிய அறிவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அறிவியல் தொழில் நட்பத்தின் வளர்ச்சியுடன் மக்கள் மென்மேலும் ஆரோக்கியமாக வாழ்வர் என்று நாம் உறுதியதாக நம்புகின்றோம்.