• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-30 09:01:18    
சீன-இந்திய நட்புறவு ஆண்டுக்கான கட்டுரை போட்டிக்கு சென்னை பழவந்தாங்கல் பி.தனசேகரன் எழுதிய கட்டுரை

cri
"சீன-இந்திய நட்புறவுக்காக நான் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய முடியும்"?

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"என்பது தமிழ் பழமொழி. இதன் பொருள் என்னவென்றால் உலகில் உள்ள அனைவரும் நம் இனத்தவர். அனைத்து இடங்களும் நம் இடமே ஆகும். உலக ஒற்றுமைக்கு இதை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

இந்திய-சீன நட்புறவுக்காக நான் செய்ய வேண்டுவது என்ன வென்றால் இரு நாட்டின் இடையே சகோதரத்துவம் வளர பாடுபடுவேன். 1500 ஆண்டுகளுக்கு முன்பே யுவான் சுவாங் என்ற சீன சுற்றுலாப் பயணி இந்தியா வந்து அனைத்து இடங்களுக்கும் சென்று இந்தியாவின் பெருமையை உலகமெங்கும் எடுத்துரைத்தார்.

அது போல் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமென்றால் சீனா சென்று அனைத்து சீன சகோதர சகோதரிகளையும் கண்டு இந்தியாவின் பெருமைகளை எடுத்து உரைப்பேன். குறிப்பாக நான் வாழும் இந்தத் தமிழ் நாடு மற்றும் தமிழ் மொழியின் வரலாறு ஆகியவற்றை எடுத்துரைப்பேன்.

இந்தியாவும் சீனாவும் நீண்ட காலப் பாரம்பரியம் கொண்ட நாடுகள். ஆதலால் சீனத்தில் நான் கண்ட அருமை பெருமைகளை எனது தாய்நாடான இந்தியாவில் பரப்புவேன்.

உலக மக்கள் தொகையில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை கட்டுப்பாடு மிகவும் அவசியம் ஆகும். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி விட்டது. சீனாவில் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற சட்டம் அமலில் இருந்து வருகின்றது. அது போல் இந்தியாவிலும் கொண்டு வருவதில் என்னைப் போன்றவர்களுக்கு பங்கு உள்ளது.

பேனா நண்பர்கள் என்பது நட்புறவை வளரச் செய்யும் மிக அற்புதமான அமைப்பாகும். சீன நண்பர்களின் முகவரிகள் எனக்கு கிடைக்குமேயானால் இங்குள்ள எனது நண்பர்களிடம் கொடுத்து கடிதம் எழுதச் செய்வேன். இதனால் முகமறியா நண்பர்களிடத்து நட்புறவு அதிகமாகும்.

நான் இதுவரை கேட்ட அயல்நாட்டு வானொலிகளில் நேயர்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தது சீன வானொலியின் தமிழ் பிரிவு மட்டுமே. அதுவும் நேயர்களுக்கு தபால் உறை மற்றும் அஞ்சல் வில்லைகள் போன்ற செலவுகள் இல்லாமல் அனைத்தையும் தாமே ஏற்று நேயர்களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்புவது மிகவும் பாராட்டுதற்குரிய ஒன்றாகும்.

இந்த சீன வானொலியை மேலும் அதிக அளவிலான தமிழக மக்கள் கேட்டு பயன் பெறச் செய்வேன். தொலைக்காட்சிப் பெட்டியை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல இயலாது. ஆனால் வானொலி பெட்டியை அனைத்து இடங்களுக்கும் எளிதாக கொண்டு செல்ல இயலும். ஆகையால் சீன வானொலியின் தமிழ் பிரிவு மேலும் வளர உதவி செய்வேன்.

அடிப்படையில் நான் ஒரு ஆசிரியர். பள்ளி மாணவர்களுக்கு இளவயதில் கற்பிப்பது பசுமரத்தாணி போல் அவர்களின் மனதில் பதிந்து விடும். ஏட்டுக் கல்வி மட்டுமே மாணவர்களுக்கு போதாது என்ற காரணத்தினால் சீன மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிச் சோல்வேன். இதன் மூலம் ஏதாவது ஒன்றிரண்டு மாணவர்களாவது பிற்காலத்தில் இந்த நட்புறவை வளர்க்க உறுதுணையாக இருக்கலாம் அல்லவா?

இவையே இந்திய-சீன நட்புறவை வளர்க்க எனனால் செய்ய முடிந்தவை ஆகும். விருந்தோம்பலில் இந்தியா குறிப்பாக தமிழகம் என்றும் முன்னணியில் இருந்து வருகிறது.

இத்துடன் எனது கட்டுரையை நிறைவு செய்து கொள்கின்றேன். நன்றி.