• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-29 11:23:18    
நிகழ்ச்சிகள் பற்றிய நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: முனுகப்பட்டு பி. கண்ணன்சேகர் ஆகஸ்ட் 19ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீனாவில் இந்திய உணவகத்தை நடத்திவரும் முனுசாமி ஞானவேலு அவர்களை பற்றிய சீனப் பண்பாடு நிகழ்ச்சி அருமை. 25 ஆண்டுகளுக்கு முன் சீன சென்ற இவர், பரபரப்பு வாழ்க்கை பிடிக்காமல் திரும்பிவிடலாம் என நினைத்து பிறகு, மகௌ தீவுக்கு செல்ல மனம் மாறியது, அவரது வாழ்க்கையின் திருப்பம் எனக் கூறலாம். கட்டிடத் தொழிலாளியாக மகௌ தீவுக்குள் நுழைந்த இவர் மெல்ல மெல்ல இந்திய மசாலா உணவுகளை விற்கும் தொழிலை துவங்கியிருப்பது, அவரின் முழு உழைப்பை தெரிந்து கொள்ள செய்கிறது. தன் வாழ்க்கை துணையை சீனாவில் தேர்வு செய்து இன்று அமைதியான இந்திய வாழ்க்கையை வாழும் இவர், சீன இந்திய உறவுக்கு பாலமாக விளங்கும் சிறந்த மனிதன் என்றே கூறலாம். இவர் சீனர்களோடு வாழும் வாழ்க்கையை நேரில் பார்க்கவேண்டும் என்று உணர்ந்தேன். சீனாவின் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழ் இதயங்களை தேடி கண்டுபிடிக்கும் கலையரசி அவர்களையும், ராஜாராம் அவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாணி:அடுத்து ஈரோடு எஸ். கே. பாப்பம்பாளையம் பி.டி.சுரேஷ்குமார் எழுதிய கடிதம். ஆகஸ்ட் 28ம் நாள் செய்திகளை கலையரசி அவர்களும், ராஜாராம் அவர்களும் வழங்கக் கேட்டேன். 2008ம் ஆண்டுக்கான் அஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான நிகழ்வுகளை உலகிற்கு எடுத்து இயம்பவுள்ள செய்தியாளர்களுக்கு சீன அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்று சீன அமைச்சர் ஒருவர் உறுதி கூறியுள்ளார் என்பதையும், இன்னும் பல தகவல்களையும் செய்திகளின் வாயிலாக அறிந்தேன். நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து திருச்சி அண்ணா நகர் நேயர் வி. டி. ரவிச்சந்திரன் செப்டம்பர் 28ம் நாள் ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். அல்சைமர் நோய் பற்றி நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது. உலகில் 12 மில்லியன் பேருக்கு இந்நோய் கண்டுள்ளது என்பதைக் கேட்டதும் நமக்கு இந்நோய் வந்தது போன்று இருந்தது. குறிப்பாக சைவ உணவு உண்பது இந்நோயை அண்டவிடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தியது. பொதுவாகவே பல நோய்களை நம் அருகே வரவிடாமல் தடுக்கும் சக்தி சைவ உணவுக்கு உண்டு. நாமும் ஒரு நாளைக்கு பெரியவர்கள் ஆகவேண்டியவர்கள். எனவே அசைவத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே நிற்போம். கொடுமையான நோய்க்கு அருமையான பெயர் என்று எழுதியுள்ளார்.