சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு கூட்டம்
cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு நேற்று பெய்சிங்கில் கூட்டம் நடத்தியது. தேசியப் பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதைத் தூண்டும் பொருட்டு, அடுத்த ஆண்டு ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி மேம்படுத்தும் என்று கூட்டம் தீர்மானித்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தலைமைச்செயலர் ஹூ சிந்தாவ் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணியை செவ்வனே செய்ய, பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதை நிலைநிறுத்தி, பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். பொருளாதாரக் கட்டமைப்பை சரிப்படுத்தி, பொருளாதார அதிகரிப்பு வழிமுறையை மாற்றுவதில் மேலும் பெரிய பயனை பெற வேண்டும். பொருளாதார அதிகரிப்பின் தரத்தையும் பயனையும் உயர்த்த பாடுபட வேண்டும். பொது மக்களின் நலன் தொடர்புடைய பிரச்சினையைத் தீர்ப்பதில் புதிய நடவடிக்கை மேற்கொண்டு, சோஷலிச இணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வ முன்னேற்றமடைவதைத் தூண்ட வேண்டும் என்று கூட்டம் கோரியுள்ளது. விரைவில் மத்திய பொருளாதார பணிக்கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டம் தீர்மானித்தது.
|
|