• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-01 11:00:36    
சீனக் காப்பீட்டுத்தொழிலின் வெளிநாட்டுத் திறப்பு

cri
உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 5 ஆண்டுகளாக, காப்பீட்டுத்தொழில் வாக்குறுதியை கண்டிப்பாக செயல்படுத்தியுள்ளது என்றும், தற்போது, காப்பீட்டுத்தொழில் பன்முகங்களிலும் வெளிநாட்டுத் திறப்பை அடிப்படையில் நனவாக்கி, சீனக் காப்பீட்டுச் சந்தை, பல்வேறு நாடுகளின் காப்பீட்டுச் சந்தைகளுடன் இணைப்பதை மேலும் விரைவுபடுத்தியுள்ளது என்று சீனக் காப்பீட்டுக் கண்காணிப்பு நிர்வாகக் கமிட்டியின் தொடர்புடைய பொறுப்பாளர் Meng Zhao Yi கூறியுள்ளார்.
நேற்று பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், சீனாவின் காப்பீட்டுச் சந்தை, உலகில் மிக முக்கியமான புதிய காப்பீட்டுச் சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது வரை, 15 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 47 அன்னிய முதலீட்டு காப்பீடு நிறுவனங்கள் சீனாவில் 121 அலுவல் அமைப்புகளை நிறுவியுள்ளன என்று Meng Zhao Yi தெரிவித்தார்.
இனிமேல், வெளிநாட்டுத் திறப்பை உத்தரவாதம் செய்யும் அமைப்பு முறையை சீனா மேலும் ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தி, சீனக் காப்பீட்டுத் தொழில் நிறுவனங்களும், அன்னிய முதலீட்டு காப்பீட்டுத் தொழில் நிறுவனங்களும் கூட்டாக வளர்வதைத் தூண்டும் என்று Meng Zhao Yi கூறினார்.