• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-01 19:26:10    
விளையாட்டுச் செய்திகள்

cri
ஆண்கள் வாலிபால் உலக சாம்பியன் போட்டிகள்

24 அணிகள் கலந்துகொண்ட ஆண்களுக்கான வாலிபால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது சுற்றிற்கு தகுதி பெற்ற 12 அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு தஙளது குழுவுக்குள்ளாக மோதி, முதற் சுற்றில் பெற்ற புள்ளிகளும், இரண்டாவது சுற்றில் பெற்ற வெற்றிகளுக்கும் ஏற்ப அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கு தெர்வு செய்யப்பட்டன. அந்த வகையில் போலந்து, ஜப்பான், அர்ஜென்டினா, போர்ட்டோ ரிக்கோ, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, கியூபா ஆகிய அணிகள் இடம்பெற்ற குழுவிலிருந்து அரையிறுதி போட்டிக்கு பிரேசிலும், போலந்தும் தகுதி பெற்றன. பல்கேரியா, இத்தாலி, செக் குடியரசு, அமெரிக்கா, செர்பியா மற்றும் மாண்டநீக்ரோ, ரஷ்யா, கனடா, துனீஷியா ஆகிய அணிகள் இடம்பெற்ற குழுவிலிருந்து செர்பியா மற்றும் மாண்டநீக்றோவும், பல்கேரியாவும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளில் பிரேசில் செர்பியா மாண்டநீக்ரோவையும், போலந்து பல்கேரியாவையும் எதிர்த்து விளையாட வெற்றி பெறும் அணிகள் உலக சாம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியிலும் மற்ற இரு அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கும் போட்டியிடும். இப்போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் முதல் 12 இடங்கள் பிடித்த அணிகளின் விபரம் அடுத்து வாரம் விளையாட்டுச் செய்திகளில் இடம்பெறும்.

ஊனமுற்றோருக்கான 9வது தொலை கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு போட்டிகள்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான 9வது தொலை கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு போட்டிகளில் தங்கங்களின் எண்ணிக்கையிலும் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையிலும் சீனா பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. 199 தங்கம், 72 வெள்ளி 36 வெண்கலம் என மொத்தத்தில் 307 பதக்கங்கள் பெற்ற சீனா முதலிடத்திலும், 61 தங்கம், 43 வெள்ளி, 47 வெண்கலம் என மொத்தம் 151 பதக்கங்கள் பெற்ற தாய்லாந்து 2வது இடத்திலும், 58 தங்கம், 42 வெள்ளி 43 வெண்கலம் என மொத்தத்தில் 143 பதக்கங்கள் பெற்ற தென்கொரியா 3வது இடமும் பெற்றன. இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி, 17 வெண்கலம் பெற்று 12 வது இடம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஊனமுற்றோருக்கான தொலை கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு போட்டிகள் முதன்முதலில் 1975ம் ஆண்டில் ஜப்பானில் நடைபெற்றது. கடந்த முறை 2002ம் ஆண்டில் தென்கொரியாவின் பூசானிலும், அதற்கு முன்பாக 1998ல் தாய்லாந்தின் பாங்காக்கிலும், 1994ல் பெய்சிங்கிலும் நடிஅஎப்ற்ற ஊனமுற்றோருக்கான தொலை கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு போட்டிகள் உட்பட கடந்த 5 முறையும் தற்போது மலெச்சியாவில் நடைபெற்ற போட்டிகளோடு சேர்த்து தொடர்ந்து 6வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது சீன அணி. இம்முறை மொத்தம் 27 உலக சாதனைகள் சிகழ்த்தப்பட்டன, அவற்றில் 17 சாதனைகளை சீன அணியினர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகள்

15வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களூம், வீராங்கனைகளும் பங்கேற்கும் இந்த 15வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 647 பேர் கொண்ட அணியை சீனா அனுப்பியுள்ளது. இதில் பெரும்பான்மையான வீரர்களும் வீராங்கனைகளும் முதன்முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் புதுமுகங்கள், இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளை சர்வதேச ரீதியிலான போட்டி வாய்ப்பாக இந்த இளம் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அனுபவ பயிற்சி வாய்ப்பாக இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் அமையும். உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை பிரதிந்தித்துவப்படுத்தும் நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரார்களும் வீராங்கனைகளும் தங்களது திறனை வெளிப்படுத்தும் சிறந்த ஒரு வாய்ப்பாக இந்த தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகளை பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது பரவலான எத்ரிபார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.