சீன மகளிர் சாதகமான தகுநிலை
cri
மேல்கூறிய 10 முக்கிய மகளிர் செய்திகளை பார்க்கும் போது, சீனாவில் மகளிர் தகுநிலை முன்பை விட உயர்ந்துள்ளது தெரிகிறது. அடுத்த கட்டுரை, அமெரிக்க ஒரு எழுத்தாளர் ரொப்பர் மாகாடேவன் வழங்குகிறார். அவர் கட்டுரை மூலம், சீனாவின் மகளிர் தகுநிலை பற்றி நீங்கள் மேலும் நன்கு புரிந்துக் கொள்ளலாம்.
தற்போது, சீன இளைஞர்கள் பலர் மேலை நாட்டு திருமண முறைகளை விரும்புகின்றனர். அவர்கள், ஒரு உணவு விடுதியில் தமது திருமண விழா நடத்தி, மணமகன் மற்றும் மணமகளின் அப்பாவும் அம்மாவும் விருந்தினர்களுக்கு உரை நிகழ்த்துகிறார்கள், இந்த வகையான திருமணவிழாவை, சீனாவில் அடிக்கடி காணலாம். இப்படிவிழா வகை மாறுவதை பார்த்தால், சீனாவின் மகளிர் தகுநிலையை உயர்வது தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நிலை என்னவென்ரால், மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் திரு மணவிழாவில் கலந்து கொள்ள முடியாது. உரை நிகழத்த முடியாது.
தற்போது, மருமகளை, மகளாக மாமியார்கள் கருதுகிறார்கள். அவர்களிடம் அன்பு காட்டி, புரியமாக நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு திருமண விழா நிறுவனங்களின் தலைவர் கூறுகிறார்.
சீன மகளிர், பணம் சம்பாதிக்கிற ஆற்றல் நாளுக்குநாள் பெருமளவில் உயர்வதுடன், மணைவியும் கணவனும் சமம் எனும் தலைப்பிலான விவாதமும், தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. சீன மகளிர் தமது தகுநிலையையும் உரிமையையும் நாடுவதற்கு இது வாய்ப்பு வழங்குகிறது. அதே வேளையில், வணிகத்துறையில், ஆண்களின் தீய நடவடிக்கைகள் சமூகத்தில் குறைகூறப்பட்டுகிறன. நவ சீனா நிறுவிய பின் 50 ஆண்டுகளில், சீன மகளிர், தமது உரிமையை பாதுகாக்கும் முக்கிய காலகட்டத்தில் நுழைந்துள்ளனர் என்று சில பார்வையாளர் கருதினார்கள்.
உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த மாற்றம் நிகழ்வதற்கு, பல தலைமுறைகள் முயற்சி செய்ய வேண்டும். ஆனால், சீனாவில் சில ஆண்டுகள் போதும் என்று ஹார்வாடு பல்கலைகழகத்தின் ஆய்வாளர் மாத்தின் வாய்ட் கூறினார்.
சீனா, வளரும் நாடுகளிடையே ஒரு வளர்ந்த நாடாக திகழ்கிறது. நகரங்களில், இளைஞர்களின் தொடர்பு மேலும் பெருகி வருகிறது. பெற்றோரின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. இப்போக்கில், பெண்களின் தன்னம்பிக்கை வலுப்பட்டு வருகிறது. இது பற்றி, சீனாவின் சமூக அறிவியல் சங்கத்தின் வல்லுநர் Dong zhi ying கருத்து தெரிவித்தார். பல்வேறு துறைகளில் பெண்கள், ஆண்களை விட மேலும் சிறந்த சாதனை பெறுகின்றனர். இப்போதைய சீனாவில், பெண்கள், முன்பை விட அதிகமான உரிமை பெற்றுள்ளனர் என்றார்.
28 வயதான li xiao wang ஒரு ஆடை விடுதியின் தலைவர், தற்போது, மக்களின் கருத்தில் முன்னேற்றம் ஏற்படுகிறது. கடந்த தலைமுறையில் இருந்து கருத்து இப்போது இல்லை. ஆண்கள் பெண்களைத் திருமண செய்வதன் நோக்கம், குழந்தை பிறப்பாக முன்பு இருந்தது. ஆனால், தற்போதைய சமூகத்தில் என்னுடைய நண்பர்களிடையே, இந்த வாழ்க்கை வாழு விருப்பம் எதுவும் இல்லை என்றார் அவள்.
ஆணும் பெணும் சமம் என்னும் கருத்து, முன்னேற்றமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் பார்க்கும் போது பல இன்னல்கள் இருக்கின்றன என்று பார்வையாளர் கருதுகிறார்..
சீனாவின் குவாங்துங் மாநிலத்தில் நடந்த ஆராய்ச்சி முடிவுக்கிணங்க, தற்போது சீனாவில் விவாக ரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டின் விவாகம் ரத்து வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளை பெண்கள் தான் தொடுத்தனர். பெண்கள் தமது கணவன் வெளியில் வேறு பெண்ணை விரும்புவதை மன்னிப்பதில்லை. பணியிடத்தில் தங்கள் மதிப்பை உறுதிப்படுத்துகின்றனர். பொருளாதார சுதந்திரம் பெறுகிறனர். 1950ம் ஆண்டு, சீன பெண்கள் பெற்ற வருமானம், தமது முழு குடும்பத்தின் வருமானத்தில் 20 விழுக்காடாக இருந்தது. இப்போது, 40 விழுக்காடாக அதித்துள்ளது.
தற்போது சீனாவின் ஆண்கள் தமது மனைவியை நாடுவது கடினம். லட்சியத்தில் சாதனை பெற்ற மகளிர், திருமண செய்த போதிலும் துறையில் வளர்யடைய விரும்புகிறார்கள் என்று மார்ட்டின் வொயிட் மேலும் தெரிவித்தார்.
பொதுவாக கூறின், சீன மகளிர் சாதகமான தகுநிலையில் இருக்கிறார்கள்.
|
|