வட கிழக்கு சீனாவின் பொருளாதாரம்
cri
சீனாவின் வட கிழக்கு பகுதியின் வளர்ச்சி பற்றிய நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள 3 ஆண்டுகளாக, இப்பகுதியில் உள்ள Liao Ning, Ji Lin, Hei Long Jiang ஆகிய மூன்று மாநிலங்களின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகின்றது. அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டு அளவு தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. சீன அரசவையைச் சேர்ந்த வட கிழக்கு பகுதியின் வளர்ச்சி அலுவலகத் தலைவர் Zhang Guo Bao நேற்று பெய்சிங்கில் நடைபெற்றக் கருத்தரங்கில் பேசுகையில், இந்நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ள 3 ஆண்டுகளாக, மூன்று மாநிலங்களின் பொருளாதார அதிகரிப்பு வேகம் விரைவாகியுள்ளது என்றும், இதற்கும் நாட்டின் சாதாரண வேகத்துக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார். அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டில், கடந்த ஆண்டு, இம்மூன்று மாநிலங்கள் பயன்படுத்தும் அன்னிய வணிகர்களின் நேரடி முதலீட்டுத் தொகை, 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட 89 விழுக்காடு அதிகம். இவ்வாண்டும் இத்தொகை விரைவாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். வட கிழக்கு பகுதியில் உள்ள பழம்பெரும் தொழிற்துறை தளங்களின் சரிப்படுத்தலில் பங்கெடுக்க, அன்னிய முதலீட்டாளரை சீனா ஈர்த்து, இப்பகுதியில் உள்ள கடலோர நகர்கள் மற்றும் எல்லை நகர்களின் திறப்புப் பணியையும், Tu Men ஆற்றுப்பள்ளத்தாக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் மேலும் மேம்படுத்தும் என்று Zhang Guo Bao கூறினார்.
|
|