• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-03 20:15:36    
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி

cri

ஆடவர் 10 மீட்டர் Air Pistol பிரிவின் குழு போட்டியில்

தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று மூன்றாவது நாளில் நுழைந்துள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று காலையில் முடிவடைந்த ஆடவர் 10 மீட்டர் Air Pistol பிரிவின் குழு போட்டியில், Tan Zong Liang, Lin Zhong Zai மற்றும் Pang Wei அடங்கும் சீன அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ளது. இப்போட்டியில், தென் கொரிய அணி வெள்ளியையும் வியட்நாம் அணி வெண்கலத்தையும் பெற்றன. இது வரை, துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில், இன்று 3 தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டன. ஆடவர் 50 மீட்டர் Rifle Prone பிரிவின் குழுப் போட்டியில், சீன அணி வெண்கலப் பதக்கத்தை பெற்றது. கசகக்ஸ்தான் அணி, தங்கப் பதக்கத்தையும், தென் கொரிய அணி, வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றன. ஆடவர் Trap பிரிவின் குழுப் போட்டியில், குவெய்த் அணி, நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்க பதக்கத்தை வென்றது. இந்திய அணி வெள்ளியையும், லெபனான் அணி வெண்கலத்தையும் வென்றன.