• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-14 21:08:58    
யாங்சு நகரம்

cri

குவெய்லினின் இயற்கை காட்சி, சீனாவில் ஈடிணையற்றது என பழமொழி உண்டு. அங்குள்ள எழிலான பசுமையான அடர்த்தியான மலைகளும் தெளிந்த ஆற்று நீரும் தனிச்சிறப்பியல்புடைய ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தவை.

இதன் காரணமாக, யாங்சு எனும் சிறு நகருக்கு உலகின் பல்வேறு இடத்து பயணிகள் வருகை தருகின்றனர். அங்கு குடியேறுவோரும் உண்டு. சிச்சியெ என்று அழைக்கப்படும் ஒரு சிறு வீதி, இந்நகரில் மிகவும் புகழ்பெற்ற ஓர் இடமாகும். சில நூறு மீட்டர் நீளமே உடைய இவ்வீதி சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடையது.

வீதி நெடுங்கிலும் அமைந்துள்ள, பாணியில் நேறுபடும் சிறிய பான அகங்கள், அற்புதமானவை. அவற்றில் பல இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவரால் நடத்தப்படுகின்றன. வருகை தருவோரும் உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள்.

யாங்சுவின் எழில் மிக்க இயற்கை காட்சியையும் வயல் காட்சியையும் கண்டு ரசிக்க, நகரிலுள்ள மிதி வண்டி கடையில் மிதி வண்டியை வாடகைக்கு எடுத்து, 40 நிமிடப் பயணத்துக்குப் பின், யியுலியான் மலை எனும் இயற்கை காட்சிப் பிரதேசத்தை அடையலாம். யியுலியான் மலை என்பது அற்புதமான மலையாகும். மலைச் சிகரத்தில் இயற்கையான வட்டமான துவாரம் உண்டு.