
சீனாவிற்கு வருவோர், சீனத் தேச உணவுப் பண்பாடு பற்றி நினைப்பது இயல்பே. ஆனால், சீனாவில் அதிக நாட்கள் தங்கியிருப்பவர்கள் தங்களது ஊர் உணவை உண்ண ஆசைப்படுகின்றனர். கவலைப்பட வேண்டாம்.
பெய்ச்சிங், சாங்ஹாய் போன்ற பெரிய நகரங்களில் வெளிநாட்டு உணவு விற்கப்படும் உணவகங்கள் அதிகமாக உள்ளன. பெய்ச்சிங் மாநகருக்கு வரும் வெளிநாட்டு நண்பர்கள் சீன உணவைச் சாப்பிட்டு, சாப்பிட்டுச் சலித்துப்போனால், இந்த உணவகங்களுக்குச் சென்று வித்தியாசமான உணவை உண்ணலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, PIZZA HUT எனப்படும் புகழ்பெற்ற பிஸா விடுதி, சீனாவின் பல்வேறு பெரிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இத்தாலி ரொட்டி சீனாவில் நன்கு விற்பனையாகின்றது. பெய்ச்சிங் மாநகரில் இத்தகைய உணவகங்கள் அதிகமாக உள்ளன.
வாடிக்கைக்காரர்களில் பலர் சீனர்கள். இவ்வுணவகம் கிராமப்புறப் பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவரில் orange நிறம் பூசப்பட்டிருக்கின்றது. மேசைகளின் மேல் கட்டம் போட்ட துணிகள் விரிக்கப்பட்டுள்ளன. இவ்வுணவகத்தில் அன்பான இயல்பான சூழ்நிலை நிறைந்துள்ளது.
20க்கும் அதிகமான வகைகளைக் கொண்ட PIZZA, இவ்வுணவகத்தின் முக்கிய உணவு. ஆனி பிசா தவிர, இவ்வுணவகத்தில் விற்பனையாகும் நான்கு பருவ பிசா மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
|