
மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்து யிசாங் நகரிலுள்ள சிகுவெய் மாவட்டத்தில் சியுவான்சி காட்சித்தலம் அமைந்துள்ளது.
துருவி ஆராய்வது, பொழுதுபோக்கு, சுற்றுப்பயணம் ஆகியவை தழுவிய உயிரின பொழுது போக்கு மண்டலமாக இத்தலம் திகழ்கின்றது. தெப்பப் பயணம், இக்காட்சித் தலத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நிகழச்சியாகும்.
உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கூடாக சியுவான்சி சிற்றாறு ஓடுகின்றது. அதன் நீண்ட இரு கரையோரத்தில் எழிலான காட்சி தென்படுகிறது. தெப்பப் பயணத்துக்கு இது மிகவும் பொருத்தமானது.
சியுவான்சி காட்சித் தலத்தில், தெப்பப் பயணம் தவிர, துச்சியா இன ஆடல்பாடலும் மிகுதியும் தனித்துவம் வாய்ந்தது. இளைஞர்களின் இனிய பாடல்களும் மங்கையர்களின் மனமுருகும் ஆடல்களும் பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளன.
மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கத் தோன்றும். சியுவான்சி காட்சித் தலத்துக்கு வருகை தரும் போது, அங்குள்ள நான்கு முக்கிய வட்டார உற்பத்திப்பொருட்களை வாங்கத் தவற வேண்டாம்.
தேயிலை, கிச்சிலிப்பழம், orchid மலர், கல் ஆகியவை இந்நான்கு பொருட்களாகும். அங்குள்ள தேயிலை, தலை சிறந்தது எனப் பாராட்டப்படுகின்றது.
|