பெய்சிங் Zhong Guan Cun அறிவியல் தொழில் நுட்பப் பூங்கா உள்ளிட்ட 18 தொழிற்துறை பூங்காக்களை, அறிவியல் நுட்பப் புத்தாக்க ஏற்றுமதி தளங்களாக சீன வணிக அமைச்சகமும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகமும் இன்று உறுதிப்படுத்தின. அரசு வழங்கும் கொள்கை மற்றும் நிதி ஆதரவை இவை அனுபவிக்கும். தற்சார்புடன் ஆராய்ந்து வளர்க்கும் புதிய உயர் தொழில் நுட்பப் பொருட்கள் இந்த தளங்களில் முக்கியமாக உற்பத்திச் செய்யப்படுகின்றன. மின்னணுத் தகவல், விமானப்பயணம், விண்வெளி, நவீன வேளாண்மை உள்ளிட்டத் தொழில்கள் இத்தளங்களில் இடம்பெறுகின்றன. சுமார் 30 அரசு நிலை பொறியியல் மையங்களும், ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்களும் இதில் உள்ளன. கடந்த ஆண்டு, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க ஏற்றுமதித் தளங்களின் ஏற்றுமதித் தொகை 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது, புதிய உயர் தொழில் நுட்பப் பொருட்களின் மொத்த ஏற்றுமதித்தொகையில் 10 விழுக்காடு வகிக்கின்றது.
|