திபெத் தகவல் மற்றும் செய்தித்தொடர்புத் துறை
cri
சீனாவின் திபெத் இன தன்னாட்சிப் பிரதேசத்தில், தகவல் மற்றும் செய்தித்தொடர்புத் துறையின் வளர்ச்சி மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என்று சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் தலைமைச் செயலர் Yoshio Utsumi கூறியுள்ளார். 2006ஆம் ஆண்டுக்கான உலகத் தொலைத் தொடர்பு பொருட்காட்சியில் சீன அரங்கை பார்வையிட்ட போது அவர் இவ்வாறு கூறினார். அண்மையில், சீனத் திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தில் தாம் பயணம் செய்ததாகவும், உள்ளூர் பிரதேசத்தில் தகவல் மற்றும் செய்தித்தொடர்புத்துறை விரைவாக வளர்ந்து, நிரந்தரத் தொலைபேசிகள் மற்றும் செல்லிடபேசிகளின் பரவல் விகிதம் வேகமாக உயர்ந்து, மின்னணுத் தகவல் பொருட்கள், திபெத் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். திபெத்தின் தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி நிலைமை மூலம், சீனத் தகவல் செய்தித்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
|
|