
மேலகனஜிங்ரு. யிங் நின். பெய்சிங்கில் வசிக்கும் ஒரு மஞ்சு இன இளம் பெண். மஞ்சு இன வரலாறு மற்றும் பண்பாடு மீது, பேரக்கறை காட்டுகின்றார். இத்தகைய இணையத் தள நண்பர்களின் சந்திப்பை தாம் மிகவும் விரும்புவதாகக் கூறினார். பரஸ்பரம் தொடர்பு கொள்வதற்கு இது வாய்ப்பினை வழங்குகின்றது என்றார்.
"இன்றைய இத்தகைய சந்திப்பு, மிக நல்லது. அனைவரும் ஒன்றுகூடி கருத்து பரிமாற்றம் செய்யலாம். மஞ்சு இனம், மங்கோலிய இனம், ஹான் இனம் என்றெல்லாம் பரிமாற்றம் செய்ய முடியும். பழைய பெய்சிங்கையும் மஞ்சு இனத்தையும் நான் அதிகமாக ஆராயவுள்ளேன். இவையனைத்தும், மஞ்சு இன பண்பாட்டுடன் தொடர்புடையது" என்றார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டோர் அனைவரும், இணையத்தளத்தின் மூலம் நெருங்கி பழகுகின்றனர். முன்பு பலர் சந்தித்ததே இல்லை. இருப்பினும், சந்தித்ததும், பழைய நண்பர் போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அன்புமிக்கவர்களாகி விட்டனர். வட சீனாவின் கடலோர நகரான திங் சிங் நகரத்திலிருந்து வந்த குவார்ஜிங் யி வே பின்வரும் தமது உணர்வைத் தெரிவித்ததாவது
"இங்கு வந்ததும் சொந்த ஊருக்கு திரும்பியது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகின்றது. என்னை புரிந்துகொள்வோர் சிலர் மட்டுமே, இருப்பினும் தேசிய இன சூழ்நிலை என்னை மனமுழுகச் செய்திடுகின்றது.
ஜசிங்ஜிங்ரு, கிம்செங் அம்மையார், சிங் வம்ச ஆட்சி பேரர்சர் குடும்பத்தின் தலைமுறையினராவார். அவர் பேசுகையில், தற்போது இளைஞர்கள் சுயமாக மஞ்சு இன மொழியைக் கற்றுக் கொள்கின்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.
|