• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-06 08:09:07    
தமிழ் மூலம் சீனம் பாடம் 65

cri
ராஜா......கலை கடந்த வகுப்பில் நாம் ஒரு வாக்கியத்தை படித்தோம்.

கலை......ஆமாம். புதிய வகுப்பைத் துவக்குவதற்கு முன் நாங்கள் அந்த வாக்கியத்தை மீண்டும் பேசிப் பயிற்சி செய்ய லாமா?

ராஜா.....செய்யலாம்.

கலை.....அப்படியானால் கடந்த வகுப்பில் நாம் என்ன படித்தோம். அந்த வாக்கியத்தை நீங்கள் கூறலாமா?

ராஜா.....சொல்கின்றேன். ச்சாங் செங் யு தோ ச்சாங்?

கலை.....பரவாயில்லையே. தெளிவாக உச்சரிக்கிறீர்களே. உங்களுக்கு ஒரு திடீர் தேர்வு வைக்கலாமா?

ராஜா.....சரி.

கலை......பெருஞ்சுவர் என்பதை சீன மொழியில் எப்படி கூறுவது?

ராஜா.......ச்சாங் செங்.

கலை......உடையது அல்லது எவ்வளவு?என்பதை சீன மொழியில் எப்படி உச்சரிப்பது?

ராஜா........யு என்று சொல்ல வேண்டும்.

கலை....மிகவும் சசிதான். அப்புறவு தோ ச்சாங் என்பதற்கு என்ன பொருள்?

ராஜா.......எவ்வளவு தூரம்.

கலை.......ராஜா நீங்கள் நன்றாக இந்த வாக்கியத்தை கற்று மனதில் புதிய வைத்துள்ளீர்கள்.

ராஜா.....நண்பர்களே எங்களுடன் சேர்ந்து இந்த வாக்கியத்தை படியுங்கள்.

கலை......ச்சாங் செங் யு தோ ச்சாங்?

ராஜா.....பெருஞ்சுவர் எவ்வளவு நீளம் உடையது?

கலை......ச்சாங் செங் யு தோ ச்சாங்?

ராஜா.....பெருஞ்சுவர் எவ்வளவு நீளம் உடையது?

கலை......ச்சாங் செங் யு தோ ச்சாங்?

ராஜா.....பெருஞ்சுவர் எவ்வளவு நீளம் உடையது?

கலை......ச்சாங் செங் யு லியு ச்சியன் தோ கொங் லி ச்சாங்.

ராஜா.......பெருஞ்சுவர் 6 ஆயிரம் கிலோமீட்டர் நீளமானது.

கலை......ச்சாங் செங் யு லியு ச்சியன் தோ கொங் லி ச்சாங்.

ராஜா.......பெருஞ்சுவர் 6 ஆயிரம் கிலோமீட்டர் நீளமானது.

கலை......ச்சாங் செங் யு லியு ச்சியன் தோ கொங் லி ச்சாங்.

ராஜா.......பெருஞ்சுவர் 6 ஆயிரம் கிலோமீட்டர் நீளமானது.

கலை.....சரி இன்றைய வகுப்பில் ச்சாங் சங் என்பதுடன் தொடர்புடைய வாக்கியங்களைப் பார்ப்போம்.

ராஜா......போன முறை யு தோ ச்சாங் என்று கற்று கொண்டோம். இன்று யு தோ குவன் என்று கற்றுக் கொள்ளலாமே.

கலை......ஆமாம் யு தோ என்ற சொற்களை கற்று புரிந்து கொண்டோம். குவன் இந்த சொல் புதியது. குவன் என்றால் என்ன பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ராஜா.....குவன் என்றால் தமிழில் அகலம் என்று பொருள்படுகின்றது.

கலை.....சரி நாம் பயிற்சி செய்யலாம். ச்சாங் செங் யு தோ குவன்?

ராஜா......பெருஞ்சுவரின் அகலம் எவ்வளவு?

கலை..... ச்சாங் செங் யு தோ குவன்?

ராஜா......பெருஞ்சுவரின் அகலம் எவ்வளவு?

கலை..... ச்சாங் செங் யு வூ மீ குவன்.

ராஜா.....பெருஞ்சுவர் 5 மீட்டர் அகலம் உடையது.

கலை......பெருஞ்சுவர் பற்றி குறிப்பிடும் போது யு தோ ச்சாங், யு தோ குவன் என்று படித்துள்ளோம்.

ராஜா.......பெருஞ்சுவர் பற்றி குறிப்பிடும் போது எவ்வளவு தூரம், எவ்வளவு அகலம் என்று படித்துள்ளோம்.

கலை........ச்சாங் செங் யு லியு சியன் கொங்லி ச்சாங். யு வூ மி குவன்.

ராஜா.......பெருஞ்சுவர் ஆறாயிரம் கிலோமீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் உடையது.

கலை........ச்சாங் செங் யு லியு சியன் கொங்லி ச்சாங். யு வூ மி குவன்.

ராஜா.......பெருஞ்சுவர் ஆறாயிரம் கிலோமீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் உடையது.

கலை.......இரண்டு வாக்கியங்களை கற்று கொணாட பின் இவற்றை இணைத்து வாசித்து பயிற்சி செய்யலாம்.

ராஜா......கலை நான் முதல் சீன மொழியில் சொல்கின்றேன். நீங்கள் தமிழில் விளக்கி கூறுங்கள்.

கலை......சரி சொல்லுங்கள்.

ராஜா......ச்சாங் செங் யு தோ ச்சாங்.

கலை.....பெருஞ்சுவர் எவ்வளவு நீளம் உடையது?

ராஜா.....ச்சாங் செங் யு லியு சியன் கொங் லி ச்சாங்.

கலை......பெருஞ்சுவர் 6 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் உடையது.

ராஜா.......ச்சாங் செங் யு தோ குவன்?

கலை.....பெருஞ்சுவர் எவ்வளவு அகலம்?

ராஜா......ச்சாங் செங் யு வூ மி குவன்.

கலை.....பெருஞ்சுவர் 5 மீட்டர் அகலம் உடையது.