• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-04 11:22:05    
டோஹா ஆசிய விளையாட்டு போட்டி

cri
நேற்று டோஹா ஆசிய விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. சீனப் பிரதிநிதிக் குழு 29 தங்கப் பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கின்றது. ஜப்பான் 7 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் தென் கொரியா 4 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆடவருக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஹுவாங் ஜன் பாவ், சீன ஹாங்காங் பிரதிநிதிக் குழுவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார். மேசை பந்து போட்டியில், சீன ஆடவர் அணி, தென் கொரிய அணியையும் சீன மகளிர் அணி சிங்கப்பூர் அணியையும் தோற்கடித்து தங்கப் பதக்கம் பெற்றன. சீன மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி, குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றது. நீச்சல் போட்டியில் சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனையான ஜி ஹுய் மகளிர் 400 மீட்டர் கலப்பு நீச்சலில் தங்கப் பதக்கம் பெற்றார். டோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பெற்ற இரண்டாம் தங்கப்பதக்கம் இதுவாகும். மகளிருக்கான பளுத் தூக்கல் போட்டியின் 58 கிலோகிராம் எடைப் பிரிவில், சீன வீராங்கனை சென் யான் ஜிங் 251 கிலோகிராம் என்ற ஒட்டுமொத்த எடையுடன் தங்கப் பதக்கம் பெற்றதோடு, பற்றி எடுத்துத் தூக்கல், அசைத்துத் தூக்கல், மொத்த எடை ஆகியவற்றில் புதிய உலகச் சாதனையை படைத்தார். மகளிருக்கான 10 மீட்டர் air கை துப்பாக்கி சுடுதல் போட்டியில், சீன அணி 1161 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை பெற்றது. இந்த சாதனை உலக பதிவுக்கு சமனானது. கால் பந்து போட்டியில் சீன அணி 3-1 என்று கோல் கணக்கில் மலேசியாவைத் தோற்கடித்தது.