• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 21:31:58    
பழங்களை உட்கொள்வதற்கு முன் கழுவுவது

cri

முதலில் ஆப்பிள் பழத்தை எப்படி அறிவியல் முறையில் தின்னுவது என்று பேசலாமா? பொதுவாக மக்கள் ஆப்பிள் பழத்தை இரண்டு முறைகளில் உட்கொள்கின்றனர். ஒன்று தோலை சீவி அப்புறம் உட்கொள்வது. இன்னொறு தோலுடன் அப்படியே தின்னுவது. இப்படி தின்றால் பிரச்சினை தான் வரும். ஏனென்றால் ஆப்பிள் பசுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை கிடங்கில் சேர்ப்பதற்கு முன் ஆப்பிளின் மேல் பசுமைப் பராமரிப்பு மருந்து தெளிக்கப்படுகின்றது.

இந்த மருந்து நமது உடம்புக்குள் போனால் நன்மை விளையாது. எப்படி தீர்ப்பது?நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். தோலில் உள்ள பசுமைப் பாதுகாப்பு மருந்தை அழிப்பதற்கு நான்கு வழிமுறைகள் உண்டு. ஒன்று, ஆப்பிள்களை உட்கொள்வதற்கு முன் தண்ணீரில் எடுத்து ஆப்பிள் தோல் மீது லேசாக உப்பு தடவுவது. இந்த உப்பினால் தோலிலுள்ள மருந்தில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. பிறகு தண்ணீரில் ஆப்பிளை கழுவிய பின் தாராளமாக தின்னலாம். உப்புக்கு கிருமியைக் கொல்லும் சக்தி அதிகம். அல்லவா?

இன்னொரு வழிமுறை என்ன என்றால் ஒரு கிண்ணத்தில் உருளை கிழங்கு மாவை தண்ணீரில் போட்டு அந்த மாவுக் கரைசலில் ஆப்பிளை கழுவ வேண்டும். இந்த வழி முறை திராட்ச்சை, பீச் ஆகிய பழங்களை கழுவுவதற்கு ஏற்றது. குறிப்பாக திராட்சை கழுவுவதற்கு சிறந்த வழி முறையாகும். ஏனென்றால் திராட்சையை சுத்தம் செய்வது மிக இன்னலானது. இந்த உருளை கிழங்கு கரைசலில் திராட்சையை கழுவினால் பழத்தின் மேல் ஒட்டியுள்ள கிருமி எளிதாக நீக்கப்படும். 3வது வழிமுறை என்ன என்றால் பற்பசையை ஆப்பிளின் மீது தேய்த்து சுத்தப்படுத்தலாம். அதை போல வென்னீரில் ஆப்பிளை கழுவி அதன் பிறகு தின்னலாம்.

நான்காவது வழிமுறை எது என்றால் எல்லோரும் செய்யக் கூடியது. அதாவது பேரங்காடியில் பழங்களைக் கழுவும் திரவம் விற்கிறது. அதை வாங்கி ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கழுவலாம். இந்த நான்கு வழிமுறைகளை நீங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள்.

காரெட் பச்சையாக சாப்பிடுவதற்கும் வேகவைத்து சாப்பிடுவதற்குமிடையில் எதில் சத்து அதிகம்?இது பற்றி கூறுகின்றோம்.

பொதுவாக மக்கள் பச்சையாக கேரட்டை தின்னுவது வழக்கம். இதை மருத்துவவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் சத்து குறைவு. ஏனென்றால் கேரட்டிலுள்ள சத்து வேகவைக்கப்பட்ட பின்தான் வெளியே வரும். ஆகவே கேரட்டை துண்டு துண்டாக நறுக்கி உணவு எண்ணெய் சேர்த்து வதக்கிய பின் கோழி இறைச்சி போன்ற கறிகளை சேர்த்து நன்றாக வேகவைத்தால் கேரட்டில் உள்ள சத்து 97 விழுக்காடு நமது உடம்பில் கலக்கும். கேரட் மீது காற்று படாமல் தடுக்க வேண்டும். துண்டு துண்டாக நறுக்கிய உடனே வேகவைத்து விட வேண்டும். அப்படி சமைப்பதன் மூலம் சத்து பாதுகாக்கப்படும். இதை நீங்கள் செய்து பாருங்கள்.