• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 21:36:17    
விவேக வளர்ச்சிக்கு தொலை காட்சி நன்மை குறைவு

cri

கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது நல வாழ்வு பாதுகாப்பு நேரம். ராஜாராம், தி. கலையரசி இருவரும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றி கூறுகிறார்கள்.

ராஜா.......கலை முதியவர்களுக்கு பொதுவாக வேலை அதிகம் இருப்பதில்லை. அவர்கள் தொலை காட்சி பார்ப்பது தவிர வேறு என்ன பொழுது போக்கில் ஈடுபடலாம்?

கலை......ஐயோ, மன்னிக்க வும். இன்றைக்கு தொலை காட்சி காண்ப்பது குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு துணை புரியுமா என்பது பற்றி முக்கியமாக விவாதிப்போம்.

ராஜா.......எனக்கு புரிந்தது. முதியோர்களுக்கு அவர்கள்

வாழ்க்கையில் வேலை செய்து ஓய்வு பெற்ற பின் டிவி பார்ப்பதில் தவறில்லை. இது சரிதானே.

கலை.......சரிதான். ஆனால் குழந்தைகளின் பண்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு டிவி பார்ப்பது சலியான வழி முறை அல்ல. குறிப்பாக 1 வயது முதல் 3 வயது வரையான குட்டிக் குழந்தைகளை டிவி பார்க்க அனுமதிப்பது சரியல்ல. அந்த குட்டிக் குழந்தைகள் நீண்ட நேரம் டிவி பார்த்தால் அவர்களின் கண்பார்வை, கேட்கும் திறன், உடல் பாகங்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும்.

ராஜா......நீங்கள் குறிப்பிட்டதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா?கேட்கவே பயங்கரமாக உள்ளது.

கலை......நான் சொன்னது உண்மைதான். நம்பாவிட்டால் மருத்துவரின் கருத்தை எடுத்து காட்டுவேன்.

ராஜா......நான் நம்புகின்றேன். ஆனால் ஏதாவது அறிவியல் ஆதாரம் கேட்ட பின் எனக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

கலை.......சரி உங்கள் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் சீனாவின் குவாங்து மாநிலத்தின் மகளிர் மற்றும் குழந்தை நல மருத்துவ மனையை சேர்ந்த குழந்தை நல மருத்துவர் லின் சோ யுன் கூறும் கருத்தை எடுத்து காட்டுகின்றேன்.

குட்டிக் குழந்தைகளை பாதுகாக்கும் கடமைப் பொறுப்பை டிவி நிகழ்ச்சிகள் ஏற்க முடியாது. மாறாக பக்க விளைவை ஏற்படும் என்று டாக்டர் லீன் கூறியுள்ளார்.

ராஜா.......ஆமாம். குட்டிக் குழந்தைகளின் கண்பார்வை, காதுகளின் கேட்கும் திறன், உடல் பாகங்கள் ஆகியவை நீண்ட நேரம் டிவி பார்க்கும் போது பாதிக்கபப்டும். டிவி பெட்டித் திரையிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு சிறு குழந்தையின் பார்வையை பாதிக்கக் கூடும். இயல்பான முறையில் பேசும் போது ஒலிவீச்சு அளவு 35 ஆக உள்ளது. டிவி ஒலியின் ஒலிவீச்சு அளவு 90 வரை உயர்கிறது. தொலை காட்சியில் ஒலிக்கும் பாடலின் அளவு சில சமயத்தில் 118 ஒலிவீச்சாக இருக்கும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளால் நீண்ட நேரத்திற்கு இந்த இரைச்சலை தாங்க முடியாது.

கலை.......ஆமாம். நீண்ட நேரம் டிவி பார்த்தால் குட்டிக் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளையும். ஏனென்றால் மனிதர்கள் பொருட்களை புரிந்து கொள்ளும் போது மூளை செல்கள் அதிகம் இயங்க வேண்டியுள்ளது. இதனால் மூளை நரம்பு ஒரு மாதிரியாக பாதிக்கப்படும். இத்தகைய இயல்பற்ற நிலையை குழந்தைகளால் தாங்க முடியாது. அவர்களுடைய கவனிக்கும் திறன் குறைந்து விடும்.

ராஜா......குட்டிக் குழந்தைகளோ பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளோ நீண்ட நேரம் டிவி பார்ப்பது நல்லதல்ல. அப்படிதானே.

கலை......ஆமாம். இது மட்டுமல்ல டிவி பார்ப்பதால் உற்றார் உறவினர்களுக்கிடையிலான உறவும் சீர்குலைகிறது. குழந்தைகள் மற்றவர்களுடன் பழகும் ஆற்றலும் பாதிக்கப்படுகிறது.

ராஜா.......நீங்கள் சொன்னது சரிதான் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திரைப்படங்களின் அம்சங்கள் புரிவதில்லை. டிவியின் சத்தம், நிறம் ஆகியவற்றில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றன. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமிடையில் கருத்து தொடர்பு இல்லாமல் போகிறது. நீண்டகாலமாக இப்படி இருந்தால் குழந்தையின் குணம் கெட்டுவிடும். மேலும் மோசம் என்னவென்றால் குழந்தை மற்றவரிடமிருந்து ஒதுங்கிவிடும்.

கலை........ஆகவே இந்த கெட்ட வழக்கத்தை சரிபடுத்தாவிட்டால் குழந்தையின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படும். வளர்ந்த பின் கூட இந்த குழந்தையின் குணம் இயல்பாக முடியாது.

ராஜா.......இந்த நிலைமைக்கு டாக்டர் ஏதாவது யோசனை கூறுகிறாரா?

கலை......டாக்டர் லின் பல யோசனைகளைக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, 1 வயதுக்குட்பட்ட குட்டிக் குழந்தை டிவி பார்ப்பதிலிருந்து தவிர்க்கப்பட வேண்டும். 1 முதல் 3 வயது வரையான குழந்தை நாளுக்கு இரண்டு முறை திபி பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடத்துக்குள் டிவியை நிறுத்திவிட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஒரு நாளில் டிவி பார்க்கும் நேரம் 1 மணிக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.