• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 16:40:19    
திபெத் பிரதிநிதிக்குழுவின் போலந்து பயணம்

cri
சீனத் திபெத்தியல் அறிஞர்கள், வாழும் புத்தர்கள் அடங்கும் பிரதிநிதிக்குழுவினர் நேற்று போலந்து நாட்டில் சில போலந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.
புகழ் பெற்ற திபெத்தியல் அறிஞரும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சமூக அறிவியல் கழகத் தலைவருமான Ci Wang Jun Mei மற்றும், சீனப் புத்த மதச் சங்கத்தின் திபெத் கிளைத் துணைத் தலைவர் Zhi Kong Qiong Cang·Luo Sang Qiang Ba வாழும் புத்தர் ஆகியோர் கூட்டத்தில், திபெத்தின் வரலாறு பற்றியும், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, சுகாதாரம் உள்ளிட்டத் துறைகளில் திபெத் தன்னாட்சி பிரதேசம் கண்டுள்ள முன்னேற்றம் பற்றியும் விவரித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டோர் திபெத்துக்கு நேரில் வந்து பயணம் செய்து, அங்கு காணப்படும் பெரும் மாற்றத்தை நேரில் உணர்ந்து கொள்வதை அவர்கள் வரவேற்றனர்.
போலந்தில், சீனத் திபெத் மீதான புரிந்துணர்வை அதிகரிக்க சிலர் விரும்புகின்றனர் என்று கூட்டத்தில் போலந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். இத்தகையக் கூட்டத்தை நடத்துவதற்கு அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, இனிமேல், பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பை நிலைநிறுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.