• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 18:56:13    
சீனாவில் கிராமங்களில் தொலைத்தொடர்பு வளர்ச்சி

cri

தொலைத்தொடர்பு சேவையில் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில், கிராமங்களில் தொலைத்தொடர்பு வளர்ச்சியை சீனா மேலும் விரைவாக்கவுள்ளது என்று சீனத் தகவல் தொழில் அமைச்சின் துணை அமைச்சர் Jang Yao Ping கூறியுள்ளார்.
2006ம் ஆண்டு உலகத் தொலைத்தொடர்பு பொருட்காட்சியின் தொடர்புடைய நடவடிக்கையில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது, சீனாவின் நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமிடையிலும், மண்டலங்களுக்கிடையிலுமுள்ள சமனற்ற தகவல் அடிப்படை வசதி வளர்ச்சி என்ற பிரச்சினை இன்னமும கடுமையானது என்றார், அவர். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, அடுத்த ஐந்தாண்டுகளில், கிராமப்புறங்களில் தொலைத்தொடரமைப்பு, மேலும் விரிவாக்கப்படும். 2010ம் ஆண்டில், அனைத்து கிராமங்களிலும் தொலைபேசி வசதி இருக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அன்றி, ஒவ்வொரு வட்டத்திலும், பட்டினத்திலும் இணைய வசதி இருக்கச் சீனா பாடுபடும். இதன் மூலம், தகவல் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தின் நன்மையை மேன்மேலும் அதிகமானோர் அனுபவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.