• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-06 19:46:25    
செக் சியாங்கின் தனியார் தொழில் நிறுவனங்கள்

cri

புகழ்பெற்ற சின்னமுடைய உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு, நீண்டகாலமாகவும், சமூகத்தின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியின் முடிவாகவும் இருக்கிறது. தொழில் நிறுவனங்களின் சொந்த முயற்சி, நுகர்வோரின் ஆதரவு, அரசின் ஆதரவு கொள்கை ஆகியவை, இதற்கு தேவைப்படுகின்றன. சீனாவில் தற்சார்ப்பு சின்னங்களின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் தாமதமாகியுள்ளது. இதனால், அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்றும் அவர் அறிமுகப்படுத்தினார்.

உண்மையில், சீனத் தற்சார்ப்புச் சின்னங்களின் உற்பத்தி பொருட்களின் அளவும், சின்னத்துக்கான கருத்தும், கட்டுமானத் திறனும் பூர்வாங்க ரீதியிலான கட்டத்தில் இருக்கின்றன. புள்ளிவிபரங்களின் படி, சீனாவின் ஏற்றுமதி உற்பத்தி பொருட்களில், தற்சார்ப்புச் சின்னங்கள் 10 விழுக்காடு மட்டுமே. உலகில் முதல் 500 முன்னணி புகழ்பெற்றச் சின்னங்களில், சீனாவின் சின்னங்கள் ஆறு இடங்களைப் பெற்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இது குறித்து சாவ் தே ரொங் கூறியதாவது:

ஒருபுறம், சீனாவில் சந்தைப் பொருளாதாரம் குறுகிய காலமாக நிறைவேற்றப்பட்டது. மறுப்புறம், தற்சார்ப்புச் சின்னங்களை பற்றி, சீனத்தொழில் நிறுவனங்களுக்கு கருத்துருவாக்கமும் உயர் புரிந்துணர்வும் குறைவு. ஆய்வு வளர்ச்சியில், சீனாவின் தொழில் நிறுவனங்கள் பொதுவாக குறைவாக முதலீடு செய்து, சந்தையின் தேவையை விட பின்தங்கி இருக்கின்றன என்றார் அவர்.

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பில், நுகர்வோர் போதுமான உணர்வைக் கொள்ள வில்லை. போலியான உற்பத்தி பொருட்கள் சந்தையில் வரவேற்கப்பட்டன. இவை, தற்சார்ப்புச் சின்னங்களின் வளர்ச்சியைத் தடை செய்யும் காரணங்களாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தே யுவான் இயந்திரக்குழுமத்தின் ஆளுனர் கேள ச்சி ச்சியுன் எமது செய்தியாளரிடம் பேசுகையில், பல நாடுகளில் நுகர்வோர் தமது நாட்டின் உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சீன நுகர்வோர் இத்தகைய கருத்தைக் கொள்வதில்லை என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சீனாவின் புகழ்பெற்றச் சின்னங்களைப் பாதுகாப்பதில், அரசு சரியான கொள்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சீனாவின் புகழ்பெற்றச் சின்னங்கள் என்னும் இதழின் தலைமை ஆசிரியர் கு ஹுவன் யூ பேசுகையில், முன்பு, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு, சீன அரசு முழுமையான கொள்கைகளை வகுத்து நிறைவேற்றியுள்ளது. ஆனால், சீன உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கான வழிக்காட்டுக் கொள்கை மேம்படுத்தப்பட வில்லை என்று கருத்து தெரிவித்தார. அவர் கூறியதாவது:

சீனாவின் சின்னக்கட்டுமானச் சூழலில் சில பிரச்சினைகள் நிலவுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்பில் சீனா சீரான கொள்கையை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் சீனத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, ஊக்கம் வழிக்காட்டுதல் மற்று்ம் ஆதரவுக் கொள்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

சீனாவின் சின்னங்களுக்கு, அரசும் செய்தி ஊடகங்களும், வலுவான ஆதரவு அளித்தால், சர்வதேசத்தில் சீரானச் சூழ்நிலை உருவாக்கப்படலாம் என்றும் கு ஹுவன் யூ தெரிவித்தார்.