• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-21 18:38:15    
மீனவர்களின் வாழ்க்கையை உணரும் சுற்றுலா

cri

குளிர்ச்சியான இலையுதிர் காலத்தில் கடற்கரைக்குச் சென்று மீனவர்களுடன் இணைந்து படகில் ஏறி மீன் பிடித்து மீனவர்களின் வாழ்க்கையை உணர்வது பயணிகள் பலர் விரும்பும் சுற்றுலா நடவடிக்கையாகும்.

இத்தகைய சுற்றுலாவை மீனவரின் வாழ்க்கையை உணரும் சுற்றுலா என்று பயணிகள் கூறுகின்றனர். கிழக்கு சீனாவின் சான்துங் மாநிலத்து ஹையாங் நகரம், மீனவரின் வாழ்க்கையை உணரும் அத்தகைய ஒரு இடம் ஆகும்.

ஹையாங் நகரின் வட பகுதியில் யியெதைய் நகரம் அமைந்துள்ளது. அதன் கிழக்கு பகுதியில் வெய்ஹைய் நகரமும் மேற்கு பகுதியில் சிங்தௌ நகரமும் அமைந்துள்ளன.

ஹையாங் நகரிலிருந்து இந்த 3 நகரங்களுக்குச் செல்வதற்கு வழியில் முறையே சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். இம்மூன்று நகரங்களும் பிரபல சுற்றுலா நகரங்கள். இதனால், பல பயணிகள் இந்நகரங்களை ஒரே சுற்றுலா நெறியில் ஏற்பாடு செய்வது வழக்கமாகும்.

அதாவது, பயணத்தின் போது, இந்த 3 நகரங்களிலும் சுற்றுலா மேற்கொள்வது வழக்கம். ஆனால், இந்நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஹையாங் நகரம், சற்று பின்னர் தோன்றிய காட்சித் தளம் ஆகும்.

ஏனெனில், இந்தப் பெருமைக்குரிய 10 ஆயிரம் மீட்டர் நீளமுடைய பொன்னிறக் கடற்கரை, கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் படிப்படியாக மக்களால் அறிந்துகொள்ளப்பட்டது.

விடுமுறை விடுதிகளில் அழகாகக் காணப்படும், வரிசை வரிசையாக நிற்கும் செடிகள் அமைந்த தோட்டம் சூழ்ந்த மனைகளும் கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் கட்டப்பட்டன.

இதனால், ஹையாங் நகரின் அழகும் அமைதியும் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இரவில் மீனவர்களின் வீட்டில் தங்கியிருப்பது, மிதக்கும் படகில் கடலில் கிடைத்த மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்பது, மீனவர்களைப் போல கடலில் மீன் பிடிப்பது என்பன, ஹையாங் உள்ளூர் அரசு ஏற்பாடு செய்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா நடவடிக்கை ஆகும்.

இது பயணிகளால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. கடற்கரையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை கடல் நீர் அளவு பெருகுவதும் குறைவதும் ஒரு சாதாரண விடயம். ஆனால், கடற்கரையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பும் மீனவர்களுடன் உரையாடுவதன் மூலம் மட்டுமே மகிழ்ச்சி அடைந்து புத்துணர்ச்சி அடையலாம்.

பயணி:இது என்ன மீன்?

மீனவர்:சூ மீன்.(mullet)

பயணி:அந்தச் சிறிய மீன்கள் எந்த வகை?

மீனவர்:அவற்றை பூமிடு என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

பயணி:இத்தகைய மீன் சுவையானதா?

மீனவர்:ஆம். நன்றாக இருக்கும்.

பயணி:எந்த வகை மீன் மிகவும் சுவையானது?

மீனவர்:perch மீன் மிகவும் சுவையானது.

பயணிகளுடன் இணைந்து ஆழமற்றக் கடலிலிருந்து மீன் பிடித்துவிட்டுக் கடற்கரைக்குத் திரும்பும் மீனவர் லீதெசெனின் கூடையிலுள்ள உயிரோடு உள்ள மீன்கள், அவற்றை உடனுக்குடன் சாப்பிட ஆசைப்படும் பயணிகளின் கவனத்தை ஈர்த்தன.

பேரம் பேசியதற்குப் பின்னர், சில பெரிய mulletகளும் கத்தி மீன்களும் விற்கப்பட்டன. தொலைவிலுள்ள ஆழமற்றக் கடலில் மீன் பிடி வலையை விரித்து, அதிகாலையில் பயணிகளுடன் இணைந்து படகில் ஏறி, வலையைச் சுருக்கிய போது, பெரிய சிறிய மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

12 அங்குல நீளமுள்ள இந்தக் கத்தி மீனின் வாய் கத்தி போன்றது. ஆகையால், கத்தி மீன் என உள்ளூர் மக்கள் அதற்குப் பெயர் சூட்டினர். இத்தகைய மீனில் கொழுப்புச் சத்து அதிகம்.

அதன் இறைச்சி மென்மையானது. மிகவும் சுவையானது என்றார் மீனவர் லீதெசென். மீனவர்களுடன் இணைந்து படகு மூலம், கடற்பரப்பில் மீன்பிடிப்பதும் படகில் அமர்ந்த வண்ணம் மீன்படிப்பதும் கடலின் மாய அழகை உணர்வதும் கடற்காட்சியைக் கண்டுகளிப்பதும் பயணிகள் முதலில் தெரிவு செய்யும் சுற்றுலா நிகழ்ச்சி ஆகும்.

கடற்கரையில் சுற்றுலாவும் பயணிகள் விரும்பும் நிகழ்ச்சி ஆகும். கடற்கரையில் சுற்றுலா என்பது, கடல் நீர் அளவு குறையும் போது, கடற்கரையில் சிப்பி, கிளிஞ்சல்கள், சின்ன மீன், இறால் முதலியவற்றைப் பொறுக்குவதாகும்.

கடல் நீர் அளவு ஓங்கிவளரும் போது, கடற்கரையிலுள்ள கடற்பாறை முழுவதும் கடல் நீரால் மூடப்படும். நீர் அளவு குறையும் போது, கடற்பாறை தென்படும். அப்போது பயணிகள் கடற்கரையில் சுற்றுலாவைத் துவங்குகின்றனர்.