சீனா தொழில் நுட்பத்தை உட்புகுத்திய தொகை
cri
சீன வணிக அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 11 திங்களில், சீனாவில் தொழில் நுட்பத்தை உட்புகுத்துவது பற்றிய 9537 உடன்படிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வுடன்படிக்கைகளின் மொத்தத் தொகை 2035 கோடி அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகம். இவ்வாண்டின் முதல் 11 திங்களில், சீனா அதன் தொழில் நுட்பத்தை உட்புகுத்திய மிகப் பெரிய ஊற்றுமூலம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். ஐப்பான், இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா, மூன்றாவது இடத்திலும் உள்ளன என்று புள்ளி விபரம் கூறுகின்றது. சீனா தொழில் நுட்பத்தை உட்புகுத்துவதில் அளவில் மிகப் பெரிய, மிகவும் வேகமாக அதிகரித்து வரும் தொழிலாக ரயில் போக்குவரத்து இன்னமும் திகழ்கின்றது என்று புள்ளி விபரம் காட்டுகின்றது.
|
|