கருத்தரங்கிற்கான இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்
-- வுகாங் கன் நியன்
மதிப்புக்குரிய அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் திரு எஸ் செல்வம் அவர்களுக்கும், மன்றத்தின் தலைமைச் செயலாளர் திரு பல்லவி கே பரமசிவன் அவர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு நடைபெறும் வேளையில் என் சார்பிலும் சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களின் சார்பிலும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாண்டு சீன-இந்திய நட்புறவு ஆண்டாகும். சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமான நட்பு வரலாறு நிலவுகிறது. பண்டைக் காலம் தொட்டு புத்த மத பண்பாட்டால் இந்த இருநாடுகளும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. சீன புத்த மதத் துறவி சியான்ச்சான் இந்தியாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்து புத்த மதத்தை ஆராய்ந்தார். இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகமும் இரு நாட்டுறவின் வளர்ச்சி வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக திகழ்கின்றது.
சீன-இந்திய நட்புறவு ஆண்டான இவ்வாண்டில் இந்தியாவில் பணி பயணம் செய்வதற்காக சீன வானொலி பிரதிநிதி குழு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரு நாட்டுறவை வளர்ப்பதற்கு பங்கு ஆற்றும் வகையில் தமிழ்ப் பிரிவு சீன-இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டி ஏற்பாடு செய்தது. இதில் 189க்கும் அதிகமான நண்பர்கள் பங்கெடுத்தனர். அத்துடன் சிறந்த கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 கட்டுரைகள் வானொலி மூலம் ஒலிபரப்பட்டன என்பதை நான் கேட்டறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இங்கே நண்பர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நண்பர்களாகிய உங்களின் முயற்சியினால் தமிழ்ப் பிரிவுக்கு வந்து சேர்ந்த கடித எண்ணிக்கை சீன வானொலியில் நேயர் பணியின் முன் வரிசையில் உள்ளது. இங்கே நான் வானொலித் தலைவர்களின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
நடப்புக் கருத்தரங்கில் என்னால் கலந்து கொள்ள முடியாதது எனக்கு வருத்தம் தான். ஆனால் ஈரோடு தமிழ் நேயர் மன்றத்தின் உதவியுடன் தலைமை செயலர் பல்லவி கே பரவிபரமசிவன் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் உளமார்ந்த முயற்சியுடன் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறுவதை கண்டு இதயப்பூர்வமான மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகின்றேன்.
சீன-இந்திய நட்பு நீடுழி வாழ்க!
தமிழ் நேயர் மன்றப் பணி பொங்கி வளர்க!
உங்கள் வாழ்க்கை தேன் போல இனிமையாக அமைக!
நன்றி!வணக்கம்
வுவான் கன் நியன்
சீன வானொலி இயக்குனர்
|