அடுத்த ஆண்டு, சீனா, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையின் தொடர்ச்சியையும் நிதானத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்தி, பொருளாதாரத்தின் சீரான வேகமான வளர்ச்சியை நனவாக்க பாடுபடும்.
இன்று பெய்ஜிங்கில் நிறைவடைந்த சீன மத்திய கமிட்டி பொருளாதார பணிக்கூட்டத்திலிருந்து இந்த தகவலை எமது செய்தியாளர் அறிந்தார். சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவும், சீன தலைமையமைச்சர் வென்சியாபாவும் கூட்டத்தில் உரை நிகழ்த்தி, அடுத்த ஆண்டில் சீனப்பொருளாதாரத்தின் வளர்ச்சி கருத்துக்கு தெளிவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அடுத்த ஆண்டில், சீனா, வெளிநாட்டுத் திறப்பு நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி, வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூகக் காப்பீடு முதலிய மக்களின் நலனுடன் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யும்.
|