
முதியோர் சேவை சீராகவும் விரைவாகவும் வளர்வதைத் தூண்டும் பொருட்டு, அரசு தலைமை தாங்கும் முன்னிபந்தனையில், முதியோர் சேவைப் பணியில் பங்கெடுக்குமாறு சமூக சக்திகளை அணிதிரட்ட சீனா பாடுபடுவதாக, சீன உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "முதுமை பிரச்சினை பற்றிய 10 ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை கலந்து கொண்ட கருத்தரங்கு டிசம்பர் 6, 7 நாட்களில் பெய்சிங்கில் நடைபெற்றது. தற்போது, சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 14 கோடியே 30 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 11 விழுக்காடாகும். சீனப் பொருளாதாரம் இன்னமும் வளராத நிலைமையிலும், பொது நிதி ஒதுக்கீடு எல்லைக்குட்பட்ட நிலைமையிலும், முதியோர் சேவைக்கான பணியில் கலந்து கொள்ளுமாறு சமூகத்தின் பல்வேறு சக்திகளை அணிதிரட்டுவது ஒரு சிறந்த வழியாகும் என்று இவ்வதிகாரி கூறினார். சமூக சக்திகள், முதியோர் நலச் சேவை அமைப்புகளை நடத்துவதற்கு சீன அரசு பெரும் பாதுகாப்பு அளித்துள்ளது. அதே வேளையில், முதியோர் சேவையில் பங்கெடுக்கும் சமூக சக்திகளுக்கு அரசு, வழிகாட்டியுள்ளது என்று அதிகாரி கூறினார்.
|