
2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்துத் திடல்களும் அரங்குகளும் 2007ம் ஆண்டின் இறுதியில் கட்டிமுடிக்கப்படும். பெய்சிங் மாநகராட்சியின் 2008 ஒலிம்பிக் திட்டப்பணி உருவாக்க ஆணையத்தின் தலைமை பொறியியலாளரும் செய்தித்தொடர்பாளருமான Wu Jing Jun இன்று பெய்சிங்கில் இதைத் தெரிவித்துள்ளார். கட்டியமைக்கப்பட்டு வரும் திடல்கள் அரங்குகள் மற்றும் தொடர்புடைய வசதிகளின் மொத்த எண்ணிக்கை, 45 ஆகும். 25 திடல்கள் அரங்குகள், 15 பயிற்சித் திடல்கள்-அரங்குகள், தொடர்புடைய 5 வசதிகள் ஆகியவை இதில் அடங்கும். தேசிய விளையாட்டுத் திடல், தேசிய விளையாட்டு அரங்கு ஆகியவற்றின் முதுகெலும்புக் கட்டமைப்பு நிர்மாணம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாண்டின் இறுதியில் தேசிய நீச்சல் மையத்தின் வெளிப்புற கட்டமைப்பு நிறைவேற்றப்படும்.
|