• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-07 08:49:17    
சில நாடுகளின் தேசிய விழா நாள்(1)

cri

ஆஸ்திரேலியா கி.பி 1788ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாளன்று யாசர்.ஃபிலிப் தலைமையிலான முதலாவது போர் கப்பல் படையின் 11 கப்பல்கள் சிட்னி நகரின் ஜேக்சன் துறைமுகத்தை அடைந்தன. இந்த கப்பல்களில் 780 சிறைக் கைதிகளும், கடற்படையினரும் அவர்களின் குடும்பத்தினரும் ஆக சுமார் 1200 பேர் இருந்தனர். இந்த வெள்ளையர்கள் பொறுமையுடன் ஆஸ்திரேலியாவின் நிலத்தில் காலடி வைத்தனர்.

இதனால் ஃபிலிப் ஆஸ்திரேலியாவின் முதலாவது ஆளுநராக மாறினார். அதற்கு பிந்திய 80 ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பிரிட்டிஷ் குற்றவாளிகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டனர். எனவே, இந்த நாடு குற்றவாளிகளைக் கொண்டு உருவான நாடு என்று வேடிக்கையாக அழைக்கப்படுகின்றது. ஜனவரி 26ஆம் நாள் ஆஸ்திரேலியா நாடு நிறுவப்பட்டதன் நனைவு நாளாகியது. அந்த நாள், ஆஸ்திரேலிய தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இத்தாலி ஜுன் திங்கள் 2 ஆம் நாள் இத்தாலியின் தேசிய நாளாகும். இரண்டாவது உலக போரில் முசோலினி இத்தாலிக்கு பெரும் நாசத்தை கொண்டு வந்தார். அவருடைய தோல்வியினால், இத்தாலியின் அரச குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டனர். 1946ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 2 ஆம் நாள் மன்னராட்சியை தொடர்ந்து நிலைநிறுத்துவதா என்பது குறித்து, இந்த நாட்டில் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பின் முடிவின் படி, இத்தாலியில் மன்னராட்சி நீக்கப்பட்டு குடியரசு ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. மன்னர் இரண்டாவது வொங்பெடோ இத்தாலியை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து இறந்தார். ஜுன் திங்கள் 2ஆம் நாள் இத்தாலியின் தேசிய நாளாக கொண்டாடப்படுகின்றது.