• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-08 20:20:02    
சீன அணி பெற்ற பதக்கங்களின் விபரம்

cri

647 பேர் கொண்ட அணியை தோஹாவுக்கு அனுப்பிய சீனா தொடர்ந்து தனது மேன்மையை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது. ஒரு சில போட்டிகளில் எதிர்பார்த்தபடி அனைத்து தங்கங்களையும் வெல்ல முடியாமல் போனாலும், பெரும்பான்மையான தங்கங்களை தனதாக்க சீனா மறக்கவில்லை.

இதில் பெரும்பான்மையான வீரர்களும் வீராங்கனைகளும் முதன்முறையாக சர்வதேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் புதுமுகங்கள். அனுபவ முதிர்ச்சியில்லாத இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என்ற நிலையிலும், புதிய அனுபவத்தில் தமது நாட்டிற்கு பெருமை தேடித்தரும் வாய்ப்பை பலர் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர் என்பதை சீன அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது. சீன் ஆணி பெற்ற பதக்கங்களின் விபரங்கள்:

தடகள விளையாட்டில் 20 கி மீ நடை பந்தயத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கபதக்கங்கள் மற்றும் பெண்கள் பிரிவின் வெண்கலம்.

பூப்பந்து விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் குழு விளையாட்டில் இரண்டு தங்கம். ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக சேர்க்கப்பட்ட சதுரங்க விளையாட்டில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு தங்கம்.

ஸ்னூக்கர் விளையாட்டில் 3 தங்கம் ஒரு வெள்ளி. சைக்கிள் பந்தயத்தில் 2 தங்கங்கள் ஒரு வெள்ளி. கலைத்திறனுடன்கூடிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் 10 தங்கம், 6 வெள்ளி.

ஜூடோவில் 6 தங்கம் 4 வெண்கலம். படகுப்போட்டியில்ல் 5 தங்கம், 1 வெண்கலம். செபக்ட்ரா எனப்படும் கால்பந்தும், வாலிபாலும் கலந்தது போன்ற விளையாட்டில் 1 வெண்கலம். துப்பாக்கிச்சுதலில் 27 தங்கம் 11 வெள்ளி 3 வெண்கலம்.

சாஃப்ட் டென்னிஸ் எனும் டென்னிஸ் விளையாட்டின் வேறு பாணி விளையாட்டில் 1 வெள்ளி. நீச்சல் போட்டிகளில் 16 தங்கம் 22 வெள்ளி 6 வெண்கலம். டேய்க்வான்டோவில் 1 தங்கம், 1 வெள்ளி. மேசைப்பந்தில் 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம். பளுத்துக்குதலில் 10 தங்கம், 4 வெள்ளி.