• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-11 21:35:33    
தோஹா ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களூம், வீராங்கனைகளும் பங்கேற்கும் 15வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த முதல் நாள் தொடக்கம் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் ஜப்பானும், மூன்றாவது இடத்தில் தென் கொரியாவும் நான்காவது இடத்தில் கசகஸ்தானும் இருந்தன. முதல் மூன்று இடங்களில் சீனாவின் முதலிடத்தை வேறு எந்த அணியும் பிடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் நிச்சயம் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை. பதக்க எண்ணிக்கையில் மட்டும் தினமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இரண்டவது இட்டக்திற்கான போட்டி எதிர்பார்த்தபடியே ஜப்பானுக்கும், தென்கொரியாவுக்குமிடையில் தொடர்கிறது. மற்றபடி வெள்ளி மாலை வரையில் கசகஸ்தான் 4ம் இடத்திலும், இந்திய 6ம் இடத்திலும், வடகொரியா 6ம் இடத்திலும், தாய்லாந்து, தைவான், மலேசியா மற்றும் ஹாங்காங் ஆகியவை முறையே 7, 8, 9 மற்றும் 10ம் இடங்களில் இருந்தன. ஆனால் ஆனால் இன்னும் 5 நாள் போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதால் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தவிர மற்ற இடங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்பதே பரவலான எதிர்பார்ப்பு.

தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:

துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் 25 மீட்டர் கைத்துப்பாக்கி பிரிவில் இந்தியாவின் ஜஸ்பால் ராணா மொத்தத்தில் 590 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். பெண்கள் 10 மீட்டர் கைத்துப்பாக்கி க்குழுப்போட்டியில் சீன அணி 1161 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தது. பெண்கள் பளுத்தூக்கும் போட்டியில் 58 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் யான்சிங் சென் மொத்த எடை, ஸ்னாட்ச் பாணி, க்ளீன் அன்ட் ஜெர்க் பாணி என அனைத்து வகையிலும் புதிய உலக சாதனை படைத்தார். பெண்கள் 63 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்து நாட்டின் பவீனா தொங்சுக் க்ளீன் அன்ட் ஜெர்க் பாணியில் உலக சாதனை படைத்தார் 75 கிலோவுக்கு கூடுதலான எடைப்பிரிவில் சீனாவின் வீராங்கனை ஷுவாங்ஷுவாங் மூ ஸ்னாட்ச் பாணியில் உலக சாதனை படைத்தார்.

இது தவிர 18 ஆசிய விளையாட்டு போட்டிகளின் சாதனை புதிதாக படைக்கப்பட்டன அல்லது சமன் செய்யப்பட்டன.