• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-12 15:30:57    
திருமண வாழ்த்து

cri
ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மகத்தான சம்பவம். மகத்தானது மட்டுமல்ல மறக்க முடியாத சம்பவமும் ஆகும். இதனாலேயே திருமணம் மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்ச்சியாக-சடங்காக மாறி விடுகிறது. இதை சீனாவில் "Xi Shi"-மகிழ்ச்சியான சம்பவம்-என்கிறார்கள். சீனாவில் திருமனத்தின் போது Xi Jiu என்னும் மகிழ்ச்சி மதுவை அருந்த வேண்டும். Xi Fang என்னும் மகிழ்ச்சி இனிப்புக்களைத் தின்ன வேண்டும். Jiu என்றால் மது, Tang என்றால் இனிப்பு. எனவே உங்களை ஒரு சீன நண்பர் பார்த்து, Shenme Shihou he nide xi jiu/Chi nide xi tang? என்று வினவினால், என்னய்யா? எப்போ நீ மகிழ்ச்சி மது, அருந்தி, மகிழ்ச்சி இனிப்பு தின்னப் போகிறாய்? என்று அர்த்தம். அதாவது எப்போ கல்யரணச் சாப்பாடு போடப்போகிறாய் என்று உங்களைக் கேட்கிறார். தமிழ் நாட்டில் நாம் ஒருவரைப் பார்த்து கல்யாண விருந்து கேட்கிறோம். சீனாவிலோ நீ எப்போது திருமண இனிப்பு தின்னப் போகிறாய்? என்று கேட்கிறார்கள். வேறுபாடு பாருங்கள்!

ஆணும் பெண்ணும் இணையும் திருமண விழாவில், நம்ப ஊர் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்குத்தாலிகட்டி மூன்று முடிச்சுப் போடுகிறார். சீனாவிலோ, மணமகனின் மேலாடையையும், மணமகனின் மேலாடையையும் இணைத்து முடிச்சுப் போடுகிறார்கள். Xi Jie Lian Li-அதாவது செடிகளின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்கிறதாம். நம்ம ஊரிலும் தாலிகட்டி முடித்து தீயை வலம் வரும் போது, மணமகனின் கைவிரல்களை மணமகள் பற்றிக் கொள்வாள். மணமகளின் சேலை முந்தானை, மணமகனின் மேலாடைத் துண்டின் நுனியுடன் சேர்த்து முடிச்சுப் போடப்பட்டிருக்கும். அப்படித்தானே!

திருமணம் முடிந்ததும் மணமக்களை Bai Nian Hao He-நூறாண்டு காலம் இனிமையான மண வாழ்வு நடத்துங்கள் என்று சீனாவில் வாழ்த்துகிறார்கள். Bai Tou Dao Lao-முதுமையை அடைந்து முழுமையாக தலை முடி நரைக்கும் வரையிலும் அன்பு மாறாத் தம்பதியாய் சேர்ந்து வாழ வேண்டுமாம். நாமோ திருமணம் நடக்கும் நல்ல நேரத்தில் முடிநரைப்பது முதுமை அடைவது போன்ற வயோதிக விஷயங்கள் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. சீனாவில் He He Mei Mei Tian Tian Mi Mi என்று வாழ்த்துகிறார்கள் அதாவது ஒற்றுமை ஒற்றுமையால் இருந்து, மகிழ்ச்சி மகிழ்ச்சியாய் வாழ்ந்து, இனிமை இனிமையாக, தேன் தேனாக இன்பம் பெருகட்டும் என்பது இதன் பொருள். இதன் நோக்கம் என்ன? Zao Sheng Gui Zi-சீக்கிரமே குழந்தை பெறுவது. நாமும் அப்படித்தானே வாழ்த்துகிறோம்-சீக்கிரமே ஒரு பேரக்குழந்தையைப் பெத்துக் கொடுங்க என்று சொல்லி மண மக்களை வெட்கப்பட வைப்பதில்லையா?