|
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
cri
|
 உள்ளூர் நேரப்படி, இன்று தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தடகளப் போட்டி, பில்லியர்ட்ஸ், மல் யுத்தப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டுகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் மொத்தம் 36 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இன்று முற்பகல் நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில் சீன வீரர் லியூ சியாங் 13.74 வினாடிகள் என்ற சாதனையுடன் தனது குழுவில் முதலிடம் பெற்று, இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றார். இன்னொரு சீன வீரர் சி துங் பொங்கும் 13.71 வினாடிகளில் கடந்து மற்றொரு பிரிவில் இரண்டாம் இடம் பெற்று, இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். இதுவரை, சீனப் பிரதிநிதிக் குழு 110 தங்கம், 63 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்களை பெற்று தங்கப் பதக்க எண்ணிக்கையிலும் மொத்த பதக்க எண்ணிக்கையிலும் முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பானிய அணி இரண்டாம் இடத்திலும் தென் கொரிய அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
|
|