• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-14 18:33:08    
பசுந் தேநீர் குடிக்க விரும்பிய இந்தியர்

cri

உலகில் மிக அதிக அளவு தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிவப்புத் தேயிலை உலகில் புகழ் பெற்றது. அத்துடன், உலகில் முதலாவது பெரிய சிவப்பு தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கின்றது. ஆனால் இன்று இந்தியாவில் சீனாவின் பசுந் தேநீர் குடிப்பது ஒரு புதிய போக்காக மாறியுள்ளது. ஏனென்றால் பச்சை தேநீர் குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது. இவ்வாண்டு இந்தியாவில் பசுந் தேயிலை நுகர்வு அளவு பத்து லட்சம் கிலோகிராமாகிவிடும். 5 ஆண்டுகளுக்குப் பின், இது 50 லட்சம் கிலோகிராமை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2005ஆம் ஆண்டு இந்தியர்கள் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் சீன பசுந் தேயிலையை நுகர்வு செய்தனர். இந்த பச்சை நேயிலை இந்திய சந்தையில் வகிக்கும் பங்கு மிக குறைவுதான் என்று இந்திய தேயிலை சங்கத்தின் தலைமை செயலாளர் மொனோகி. தாஸ்குப்தா கூறினார். இந்திய மக்கள் ஆண்டுதோறும் சராசரியாக 65 கோடி கிலோகிராம் தேயிலை நுகர்வு செய்கிறார்கள். ஆனால் 2005ஆம் ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுந் தேயிலையும் வெள்ளை தேயிலையும் ஒரு விழுக்காட்டுக்குளேதான்.

ஆனால் சீனாவுக்கும் அதில் மேம்பாடு உண்டு. இந்தியாவில் 50 ஆயிரம் கிலோகிராம் நல்ல தரமுடைய டார்ஜிலிங் தேயிலை உற்பத்தியாகிறது. ஆனால் இதே தரமுடைய பத்து வகைக்கும் அதிகமான தேயிலை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இந்தியாவின் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்வதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன.

தவிரவும் சீனாவின் தேயிலைச் செடி நடும் தொழில் நுட்பத்தை இந்தியா உட்புகுத்திய பின், சீனத் தேயிலையின் விலை, கிலோகிராமுக்கு 17.6 அமெரிக்க டாலராக இறங்கும். சீனத் தேயிலை இந்திய சந்தையில் விற்பனையாவதற்கு இது துணைபுரியும். நேயர்கள் இதுவரை, இரண்டு விசித்திரமான தகவல்களைக் கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மலர்ச்சோலை நிகழ்ச்சி நிறைவடைகின்றது.