அடுத்த ஆண்டில், சீனப் பொருளாதாரம், 10 விழுக்காட்டு வேகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரப்பூர்வ நிறுவனங்களும் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளனர்.
உலகப் பொருளாதாரத்தின் ஒப்பீட்டளவிலான வேகமான அதிகரிப்பு, அடுத்த ஆண்டில் சீனப்பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சீரானச் சூழலை உருவாக்கும். உள்நாட்டு வினியோகம், பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கக்கூடும். அடுத்த ஆண்டு, சீனாவில் முதலீட்டு சக்தி தொடர்ந்து அதிகரிக்கும். அதே வேளை, நுகர்வு சீரான வளர்ச்சி நிலைமையை நிலைநிறுத்தி வருகிறது என்று சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
|