கடந்த சில ஆண்டுகளில், சீனத்தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்து வணிகத்தில் ஈடுபட்ட கட்டத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன. பூர்வாங்க புள்ளிவிபரத்தின் படி, இதுவரை, வெளிநாடுகளில் உள்ள சீனத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அவற்றின் நிதிசாரா மொத்த சொத்து மதிப்பு, 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டி, ஆண்டு விற்பனை வருமானம், 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று சீனத் துணை வணிக அமைச்சர் WEI JIAN GUO அறிவித்தார்.
நேற்று பெய்ஜிங்கில் பேசிய அவர், தற்போது, சீனத்தொழில் நிறுவனங்கள் சுமார் 160 நாடுகள் மற்றும் வட்டாரங்களில் முதலீடு செய்துள்ளன என்றார்.
|