நந்தியாலம் டி. தணிகாச்சலம் எழுதிய செப்டம்பர் 30ம் நாள் ஒலிபரப்பான சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். யா இனக்குடும்பம் பற்றியும், அங்கு வந்த தைவான் பல்கலைக்கழக மாணவர்களை, அவர்கள் பாரம்பரிய முறைப்படி மது கொடுத்து வரவேற்றார்கள் என்று அறிந்தோம். பல்வேறு இனங்களின் பல்வேறு பழக்க வழக்கங்களை தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது. இசை நிகழ்ச்சியில் காதலர்கள் பிரிந்துபோவது தொடர்பான பாடலும், 900 வார்த்தைகள் சொல்லி உள்ளேன் அனுமதித்தால் ஒரு வார்த்தை சொல்வேன் என்ற பாடலும் கேட்டேன். நல்ல பாடல்கள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: பெரம்பலூர் சின்னவளையம் கு. மாரிமுத்து செப்டம்பர் 30ம் நாள் ஒலித்த செய்திகள் குறித்து எழுதிய கடிதத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் மிக முக்கிய பொறுப்பு வகித்து வந்த் அதோழர் சங் யங் லி என்பவரை கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார் எனக்கூறி அவரைக் கட்சியில் இருந்தும், அவர் வகித்த பொறுப்பிலிருந்தும் நீக்கியது வரவேற்கத்தக்கது. உலகக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இது ஒரு பாடமாக அமையும், மேலும் அவர் செய்த தவறுகளுக்கு சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வருவது, தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே ஆகவேண்டும் என்பதை உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வாணி: அடுத்து சென்னை மேற்குத் தாம்பரம் நேயர் மோ. கணேசன் எழுதிய கடிதம். அக்டோபர் முதல் நாள் நேயர் விருப்பம் நிகழ்ச்சியைக் கேட்டேன். ஒலிபரப்பு சரியாக கிடைக்காததால் வாசித்த பெயர்கள் சரியாக கேட்கவில்லை. மற்றபடி நிகழ்ச்சி நன்றாக இருந்தது. பச்சைக் கிளி, முத்துச் சரம் என்ற பாடலைக் கேட்டது இனிமையாக அமைந்தது, தொடரட்டும் உங்கள் பணி என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி எம். ஏ. சஹ்பி அஹ்மட் எழுதிய கடிதம். தனது நண்பௌ சீன வானொலி நேயர் மு. மு. மபாஸின் மூலம் சீன வானொலி நிகழ்ச்சிகளை தெரிந்துகொண்டு தற்போது நிகழ்ச்சிகளை செவிமடுத்து வருவதாகவும், சீன கலாச்சாரம், பாரம்பரியம், நட்புறவு, சாதனைகள், தொழில்நுட்பம், தேசிய இனங்கள், உள்ளிட்ட பல தகவல்களை நண்பர் மபாஸ் எடுத்துக் கூறி நிகழ்ச்சிகளை கேட்க ஊக்கமூட்டினார் என்றும் அந்த் ஊக்கத்தால் உந்தப்பட்டு தற்போது நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறதாகவும் சீன வானொலியின் நேயராகவும் இணைந்து கொள்ல விரும்புகிறதாகவும் எழுதியுள்ளார்.
வாணி: அன்பு சஹ்பி அஹ்மட் அவர்களே, தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள். உங்களை தமிழ்ப்பிரிவு குடும்பம் அன்போடு வரவேற்கிறது.
|