• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-15 21:50:27    
ஆசிய விளையாட்டு போட்டிகள்

cri

டிசம்பர் முதல் நாள் தொடக்கம் 15ம் நாள் வரை நீடித்த 15வது ஆசிய விளையாட்டு போட்டிகள், எதிர்பார்த்தபடியே சீனாவின் விளையாட்டுத் துறையிலான மேன்மையை என்பிப்பதாக அமைந்தன. கத்தார் தலைநகர் தோஹாவில் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 500 விளையாட்டு வீரார்களும் வீராங்கனைகளும் பங்கேற்ற இந்த 15வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை சீனாவும், இரண்டாவது இடத்தை தென் கொரியாவும், மூன்றாவது இடத்தை ஜப்பானும் பெற்றுள்ளன.

கசகஸ்தான் 4 வது இடத்தையும், தாய்லாந்து 5வது இடத்தையும், ஈரான் 6வது இடத்தையும், உஸ்பெகிஸ்தான் 7வது இடத்தையும், இந்தியா 8வது இடத்தையும், தைவான் 9வது இடத்தையும், மலேசியா 10வது இடத்தையும் பிடித்தன.

தடகள விளையாட்டில் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, ஈட்டியெறிதலில் வெண்கலம், ட்ரிபிள் ஜம்ப் வகை நீளம் தாண்டுதலில் தங்கம். கழிதாண்டும் போட்டியில் வெண்கலம், 20 கிமீ நடைபந்தயத்தில் தங்கம், 400 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளி, 110 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி, 3000 ம் ஸ்டீபில்சேஸ் போட்டியில் வெண்கலம், 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம். பெண்கள் பிரிவில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம், குண்டெறிதலில் தங்கம் மற்றும் வெள்ளி, வட்டெறிதலில், தங்கம் மற்றும் வெள்ளி, ஈட்டியெறிதலில் வெள்ளி, சுத்தியெறிதலில் தங்கம் மற்றும் வெள்ளி, டிரிபிள் ஜம்ப் வகை நீளம் தாண்டுதலில் தங்கம் மற்றும் வெண்கலம், உயரம் தாண்டுதலில் வெள்ளி, கழிதாண்டும் போட்டியில் தங்கம் மற்ரும் வெண்கலம், 20 கிமீ நடைபந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம், மராத்தன் போட்டியில் தங்கம், 400 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம், 100 மீட்டர் தடையோட்டத்தில் தங்கம் மற்ரும் வெள்ளி, 100 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கம், 400 மீட்டர் தொடரோட்டத்தில் வெண்கலம்.

பூப்பந்து விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி, குழுப்பிரிவில் தங்கம். பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம், இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி, குழுப்பிரிவில் தங்கம். கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி.

கூடைப்பந்து விளையாட்டில் பெண்கள் பிரிவில் தங்கம்.

ஆணழகர் போட்டியில் 60 கிலோவுக்கு குறைவான எடைப்பிரிவில் தங்கம். பீச் வாலிபால் விளையாட்டில் ஆடவர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி, பெண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம்.

குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி.

வள்ள ஓடம் மற்றும் படகுப்போட்டியில் ஆடவர் பிரிவில் 5 தங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம். பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி.

சதுரங்க விளையாட்டில் ஆண்கள் பிரிவில் வெண்கலம், பெண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் கலப்புக்குழுப்பிரிவில் வெள்ளி.

அரங்கத்துக்கு வெளியே சாலைகளிலான சைக்கிள் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி. அரங்கத்துக்குள்ளான சைக்கிள் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம். பெண்கள் பிரிவில் 3 தங்கம் 2 வெள்ளி, 1 வெண்கலம்.

நீர்குதிப்பு போட்டியில் ஆடவர் பிரிவில் 5 தங்கம் 3 வெள்ளி, பெண்கள் பிரிவில் 5 தங்கம் 3 வெள்ளி.