ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில், அன்னிய முதலீட்டுக்கு வசதி வழங்குவது
cri
அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியுள்ளன. அன்னிய முதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் நுழைவதற்கு மேலும் கூடுதலான வசதிகளை சீனா வழங்கும் என்று சீன வணிகத் துறை அமைச்சகத்தின் அன்னிய முதலீட்டுப் பிரிவின் துணைத் தலைவர் Sun Peng கூறினார். நேற்று பெய்சிங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில், உலக மற்றும் வட்டார அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை சீனாவில் நிறுவி, சீனாவின் அறிவியல் ஆய்வுக் கழகங்கள் மற்றும் தொடர்புடைய தொழில் நிறுவனங்களுடன் பல்வகை வடிவங்களின் ஒத்துழைப்பை மேற்கொள்ளுமாறு அன்னிய முதலீட்டாளர்களை சீனா ஊக்குவிக்கின்றது என்றார். மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி இறக்குமதி அனுமதி, திறமைசாலிகளை வேலைக்கு அமர்த்துவது ஆகியவற்றில் அன்னிய முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தொடர்புடைய விதிகளை சீன வணிக அமைச்சகம் வகுத்து வருகின்றது என்று Sun Peng கூறினார்.
|
|