சீனாவில் உலக வங்கி கடன் பயன்பாடு
cri
உலக வங்கி கடனைப் பயன்படுத்தி, யாங் சு ஆற்றின் மேல்பகுதியில் நீர் மண் வளப் பாதுகாப்புக்கான திட்டப்பணி, இவ்வாண்டின் செப்டம்பர் திங்களில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதற்கு முன்னர், உலக வங்கி கடனுடன் மஞ்சள் பீடபூமியில் நீர் மண் வளப் பாதுகாப்புக்கான திட்டப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இது மற்றொரு முக்கிய திட்டப்பணியாகும். யாங் சு ஆற்றுப் பள்ளத்தாக்கிலான யுன்னான், கு சோ, ஹூபெய், Chong Qing ஆகியவற்றில் இத்திட்டப்பணி நடைபெறுகின்றது. அதன் மொத்த முதலீடு, 162 கோடி யுவானாகும். இதில் பத்து கோடி அமெரிக்க டாலர், உலக வங்கி வழங்கும் கடனாகும். 6 ஆண்டுகள் நீடித்திருக்கும் இத்திட்டப்பணியினால், சுமார் 3200 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படும்.
|
|