• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-18 18:16:51    
தைவான் நீரிணை இருகரை வேளாண் ஒத்துழைப்பு

cri

தைவான் நீரிணை இருகரை வேளாண் ஒத்துழைப்பு, கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளில் தொடங்கியது. தற்போது, ஆண்டுதோறும் இரு கரை வேளாண் உற்பத்தி பொருட்களின் வர்த்தகத் தொகை, 90 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. அண்மையில், ஹைநான் மாநிலத்தின் போ ஓ நகரில், இரு கரை வேளாண் ஒத்துழைப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. இதுவரை இரு கரைகளுக்கிடையில் நிகழ்ந்த மிகப் பெரிய வேளாண்மை பரிமாற்ற நடவடிக்கை இதுவாகும். இரு கரை வேளாண் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பெருநிலப்பகுதி தொகுத்து வெளியிட்டுள்ளது.

தைவான் நீரிணையின் இருகரைகளிலும், ஒத்த வேளாண் துறை நிலைமையைக் காண முடியும். ஒன்றிடம் இல்லாதவற்றை மற்றது நிறைவு செய்யும் வாய்ப்பு அதிகம். பெருநிலப்பகுதியின் வேளாண் மூலவளம் செழிப்பானது. சந்தை பரந்துபட்டது. உற்பத்திப் பொருட்களின் செலவு ஒப்பீட்டளவில் குறைவு. பயிரிடும் தொழில் நுட்பம், வேளாண்மை நிர்வாகம், விதைகளின் வளர்ப்பு ஆகியவற்றில், தைவானின் வேளாண் துறை மேம்பாடுடையது.

கடந்த சில ஆண்டுகளில், பெருநிலப்பகுதி, இரு கரை வேளாண்மை ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாகத் தூண்டி, தைவானின் வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு பல முன்னுரிமைக் கொள்கைகளை வகுத்து வழங்கியுள்ளது. இதனால், பெருநிலப்பகுதியில் தொழில் புரிய வந்த தைவானின் வேளாண் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, பயிரிடுதல், வளர்ப்புத் தொழில், உணவு, குடிப்பான பதனீட்டுத் தொழில் முதலிய துறைகளில், அவை முதலீடு செய்துள்ளன.

சீனத் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ஜியாச்சிங்லின், இரு கரை வேளாண் ஒத்துழைப்பின் எதிர்காலத்தை பற்றி குறிப்பிடுகையில், பெருநிலப்பகுதி, ஒத்துழைப்பின் அளவையும் ஆழத்தையும் மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:

வேளாண்மை, வனத்தொழில், கால்நடை வளர்ப்புத்துறை மற்றும் மீன்பிடித்தொழிலிலும், உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனையிலும், முழுமையான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். பல்வேறுத் துறைகளில் ஈடுபடும் விவசாயிகளின் பங்கெடுப்பை ஈர்த்து, அவர்களுக்கு பரந்தளவில் நலன் தர பாடுபட வேண்டும். முக்கியத் துறைகளுக்கும் முக்கிய வட்டாரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிர் தொழில், வளர்ப்பு தொழில், வேளாண் உற்பத்தி பொருட்களின் பதனீட்டுத் தொழில் ஆகியவற்றின் உற்பத்தி அளவை விரிவாக்கி, முதுகெலும்புத் தொழில் துறைகளையும் முன்னணித் தொழில் நிறுவனங்களையும் வளர்த்து, புதிய உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தொழில் துறையிலுள்ள அறிவியல் தொழில் நுட்பம், கூட்டு மதிப்பு மற்றும் போட்டியாற்றலை உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

இக்கருத்தரங்கில், இரு கரை வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பல பதிய நடவடிக்கைகளை பெருநிலப்பகுதி தொகுத்து வெளியிட்டுள்ளது. இரு கரை வேளாண் ஒத்துழைப்புச் சோதனை மண்டலத்தையும், தைவான் விவசாயிகள் தொழிலைத் துவக்கும் மண்டலத்தையும் நிறுவுவது, இரு கரை வேளாண் உற்பத்தி பொருட்களின் வர்த்தக வசதிமயமாகத்தை மேம்படுத்துவது, இரு கரை வேளாண் துறையில் அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றத்தை வலுப்படுத்துவது முதலியவை இதில் இடம்பெறுகின்றன.