• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-20 08:07:54    
தமிழ் மூலம் சீனம் பாடம் 66

cri
எவ்வளவு உயர் கற்றுக் கொள்வது

ராஜா......கலை கடந்த வகுப்பில் நாங்கள் ச்சாங் சங் பற்றிய சில சொற்களை படித்தோம்.

கலை......ஆமாம். புதிய வகுப்பு துவக்குவதற்கு முன் நாங்கள் ச்சாங் சங் யு தோ ச்சாங், யு தோ குவான் போன்ற வாக்கியங்களை மீண்டும் பேசிப் பயிற்சி செய்ய லாமா?

ராஜா.....செய்யலாம்.

கலை.....அப்படியானால் கடந்த முறை நாம் என்ன படித்தோம். அந்த வாக்கியத்தை நீங்கள் விளக்கி கூறலாமா?

ராஜா.....என் நினைவு இருக்கிறது. ச்சாங் சங் யு தோ ச்சாங், ச்சாங் சன் யு தோ குவான் என்ற இரண்டு வாக்கியங்களை படித்தேன்.

கலை....ஆமாம். ச்சாங், குவான் ஆகிய இரண்டு சொற்களை படித்தோம். இன்று படிக்க போகின்ற சொல் ச்சாங் சங்குடன் தொடர்புடையது.

ராஜா....அப்படியா. நீளத்திற்கு ச்சான் என்றும், அகலத்திற்கு குவான் என்றும் படித்தோம. இனி உயரம் பற்றி சீன மொழியில் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிதானே.

கலை..... உயரம் என்ற சொல் நாம் கற்றுக் கொள்ள போகின்ற புதிய சீன மொழி சொல்லாகும். உயரம் என்பதை சீன மொழியில் கௌ என்று சொல்ல வேண்டும்.

ராஜா..... நான் மெதுவாக சொல்கின்றேன். கௌ, கௌ . கௌ என்றால் தமிழில் உயரம் என்பதற்கு சமமாகும். சரியா?

கலை.....சரிதான். ஆகவே முன்பு கற்றுக் கொண்ட ச்சாங் சங் யு தோ கௌ என்று கேட்டால். நீங்கள் முழுமையாக பதிலளிக்க முடியுமா?

ராஜா.....முயற்சி செய்கின்றேன். ச்சாங் சன் யு தோ கௌ, சாச்சாங்சன் யு தோ கௌ.

கலை.....பரவாயில்லை. நன்றாக உச்சரிக்கிறீர்கள். நாம் மாறி மாறியாக சீன மொழியிலும் தமிழ் மொழியிலும் இந்த வாக்கியத்தை மூன்று முறை படிக்கலாமா?

ராஜா.....படிப்போம். ச்சாங் சன் யு தோ ச்சான்?

கலை......பெருஞ்சுவர் எவ்வளவு நீளம்?

ராஜா.....ச்சாங் சங் யு லியு சியென் தோ குங்லி ச்சான்.

கலை......பெருஞ்சுவரின் நீளம் ஆறாயிம் கிலோமீட்டர் நீளமான.

ராஜா........ச்சாங் சங் யு தோ குவான்?

கலை.......பெருஞ்சுவர் எவ்வளவு அகலம்?

ராஜா......ச்சாங் சங் யு வூ மி குவான்.

கலை.......பெருஞ்சுவர் ஐந்து மீட்டர் அலகமாகும்.

ராஜா........அடுத்து சீன மொழியில் கௌ என்ற சொல். இது உயரத்தை குறிப்பது. வாக்கியமாக சேர்த்து படித்தால் ஞாபகத்தில் நன்கு பதியும்.

கலை......ஆமாம். சீன மொழியில் கௌ தமிழ் மொழியில் உயரம் ஒரு வாக்கியமாகச் சேர்த்து நாம் படிப்போம்.

ராஜா.......ச்சாங் சங் யு தோ கௌ?

கலை.....பெருஞ்சுவரின் உயரம் எவ்வளவு?

ராஜா.....கலை கௌ என்ற சீன சொலை கற்றுக் கொண்டே எவ்வளவு உயரம் கேட்டால் கண்டிப்பாக அவ்வளவு மீட்டர் உயர் என்று பதிலளிக்க வேண்டும். அப்படிதானே.

கலை.....ஆமாம். கௌ கேட்டால் 8 மீட்டர் உயரம் என்று பதிலளிக்கலாம். சீன மொழில் நான் முதலில் சொல்கின்றேன். ச்சாங் சங் யு தோ கௌ?ச்சாங் சங் யு பா மி கௌ.

ராஜா....நான் பயிற்சி செய்யலாமா?பா மி கௌ என்றால் 8 மீட்டர் உயரம் தானே.

கலை.....ஆமாம். துணிவுடன் தாராளமாக பயிற்சி செய்யுங்கள்.

ராஜா...... ச்சாங் சங் யு தோ கௌ?ச்சாங் சங் யு பா மி கௌ.

கலை.....மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

ராஜா...... ச்சாங் சங் யு தோ கௌ?ச்சாங் சங் யு பா மி கௌ.

கலை......நண்பர்களே. இது வரை ச்சாங் சங் யு தோ ச்சான், ச்சாங் சங் யு தோ குவான்?ச்சாங் சங் யு தோ கௌ?என்ற மூன்று வினாக்களை கற்றுக் கொண்டுள்ளோம். அவற்றுக்கு சமமான பதில் வாக்கியங்களையும் படித்துள்ளோம்.

ராஜா....அடுத்த முறை பெருஞ்சுவரின் வரலாறு தொடர்பான சொல்களை கற்றுக் கொள்வோம். வகுப்புக்கு வெளியே இதை முன்கூட்டியே படிக்க முடியுமா?

கலை...... ச்சாங் சங் பற்றி வகுப்பு கற்றுக் கொண்ட பின் நாம் சிறிய தேர்வு வைப்போம். அக்கறை இருந்தால் உங்களை தொடர்பு கொள்ளும் வழி முறை பற்றி தெரிவியுங்கள். அடுத்த வகுப்பு நடத்திய பின் ஆர்வம் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இந்த வகுப்பை திரும்பவும் நடத்தி தேர்வு வைக்கலாம்.

ராஜா.....இதில் முக்கியமானது கவனியுங்கள். நீங்கள் விரும்பினால் மட்டுமே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.