கலை......இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம்.
கிளிடஸ்.......கலை, போன முறை நாம் காளான் கலந்த கோழிக் கறி பற்றி அறிமுகபடுத்தினோம்.
கலை.......ஆமாம். விடுமுறை நாட்களில் நீங்கள் அதை சமைத்து சுவைத்துப் பார்த்தீர்களா?
கிளிடஸ்.......இல்லை, கலை நான் சமைத்துப் பார்க்க வில்லை.
கலை.......பரவாயில்லை. இன்றைக்கு கோழிக் கறி சமைப்பது பற்றிய தகவல்களை மேலும் கூடுதலாக அறிமுகபடுத்துகின்றேன். நீங்கள் நேரம் இருந்தால் அனைத்தையும் சமைத்து சுவைப் பாருங்கள்.
கிளிடஸ்........சரி நீங்கள் சொல்லுங்கள்.
கலை........இந்த முறை கோழிக் கறி சமைப்பது கோழி pinion பகுதி மட்டும் தேவை.
கிளிடஸ்......பேரங்காடியில் இதை வாங்க முடியுமா?
கலை.......முடியும். எவ்வளவுத் தேவையோ அவ்வளவு நீங்கள் வாங்குங்கள்.
கிளிடஸ்.....சரி. இதை சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை முதலில் விவரியுங்கள்.
கலை......நான் சொல்வேன். நீங்கள் நுணுக்கமாகக் கேளுங்கள்.
கிளிடஸ்.......சரி கலை நான் கவனமாக குறிப் பெடுத்துக் கொள்வேன். கலை........முதலில் கோழி pinion 4 செட்கள். காளான் 40 கிராம், கீரை 20 கிராம். உப்பு தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி. சர்க்கரை தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி. மசாலாத் தூள் தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி.
கிளிடஸ்.......நான் மீண்டும் சொல்லட்டுமா?
கலை.........சொல்லுங்கள்.
கிளிடஸ்.......... கோழி pinion 4 செட்கள். காளான் 40 கிராம், கீரை 20 கிராம். உப்பு தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி. சர்க்கரை தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி. மசாலாத் தூள் தேக் கரண்டியில் மூன்றில் ஒரு பகுதி. கலை..........பரவாயில்லை. நான் சொன்னதை நீங்கள் நூற்றுக்கு நூறாக சரியாகக் குறிப்பிட்டீர்கள்.
|