• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-19 22:11:38    
இரைச்சலில் எம்பி 3 கேட்பது தடுப்பு

cri

ராஜா.....நீங்கள் கேட்டு கொண்டிருப்பது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி.

கலை.......இனி உடல் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து விவாதிப்போம்.

ராஜா..... கடின வேலை தேவையில்லை என்று கூறினோம். தொடர்ந்து 3 என்னூம் இசைப்பதிவு கேட்பதில் கவனிக்க வேண்டியது பற்றி விளக்கி கூறலாமே.

கலை......ஆமாம். எம்பி 3 எம்பி 4 என்ற இசைப் பதிவுக் கருவிகள் மக்களின் வாழ்க்கையில் மகிழ்சி தருகின்றன. ஆனால் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதில் சில அறிவியல் வரையறைகள் உண்டு அல்லவா?

ராஜா......சரிதான். இரைச்சலான சூழ்நிலையில் பல்வகை இசைகளை கேட்டால் செவிமடுக்கும் ஆற்றல் குறைந்து விடும்.

கலை.....இது பற்றி சீன நட்பு மருத்துவ மனையில் ஐம்புலன்து நோய்ப் பிரிவில் பணிபுரிகின்ற மருத்துவர் ச்சான் தோ சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜா.....அவர் என்ன எச்சரிக்கிறார்?

கலை......இயல்பான சூழ்நிலையில் உரையாடி கருத்துக்களை பரிமாறும் போது ஏற்படும் ஒலியை செவிமடுக்க முடியும் அளவோடு பேசுவது சுகமான சத்தமாகும்.

ராஜா.....இல்லை என்றால் என்ன ஆகும்.

கலை......இல்லை என்றால் 70 முதல் 80 என்ற ஒலிவீச்சு அளவில் உரையாடினால் காதுகளின் கேட்கும் திறமைக்கு பாதிப்பு ஏற்படும். அல்லது வாக் மேன் மூலம் இசைகளை செவிமடுக்க வேண்டிய சூழ்நிலையில் 30 ஒலிவீச்சு அளவை மீறி அதாவது 100 முதல் 110 ஒலிவீச்சு வரையில் பேசுவதால் செவிக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

ராஜா......எனக்கு புரிந்தது. அதாவது இயல்பான கேட்ப்பதற்கு தேவையான இயல்பான ஒலி 30 முதல் 40 ஒலிவீச்சு அளவு வரை இருக்க வேண்டும். இதை தாண்டினால் இரைச்சல் எனப்படும். அப்படிப் பேசுவது உடம்புக்குத் தீங்கு விளைவிக்கும். அப்படிதானே.

கலை......ஆமாம். கடந்த சில ஆண்டுகளாக காதுகேட்கும் திறனை இழந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இரைச்சலான சூழ்நிலையில் காதொலிக்கருவி இசை கேட்பதே இதற்கு முக்கிய காரணம்.

ராஜா......எபர்போதாவது தவறான சூழ்நிலையில் இசைகளை கேட்கலாமா?

கலை.......கூடாது. இயல்பான வாழ்க்கை வழக்கத்தை மீறி செயல்பட்டால் உடம்பு பாதிக்கப்படும். இது அறிவியல் விதிதான்.

ராஜா.........ஆகவே நாம் அன்றாட வாழ்க்கையில் அறிவியல் முறையில் இசைக் கருவியை பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். இப்படி செயல்பட்டால் நமது வாழ்க்கைத் தரம் உயரும்.