• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-28 19:27:09    
மீனவர்களுடன் விடுமுறை நாட்களைக் கழிக்கும் பயணிகள்

cri

மீனவர்களுடன் இணைந்து படகு மூலம், கடற்பரப்பில் மீன்பிடிப்பதும் படகில் அமர்ந்த வண்ணம் மீன்படிப்பதும் கடலின் மாய அழகை உணர்வதும் கடற்காட்சியைக் கண்டுகளிப்பதும் பயணிகள் முதலில் தெரிவு செய்யும் சுற்றுலா நிகழ்ச்சி ஆகும்.

கடற்கரையில் சுற்றுலாவும் பயணிகள் விரும்பும் நிகழ்ச்சி ஆகும். பாருங்கள், செல்வி சாங்வென், கடற்பாறையின் அருகே கவனமாக எதையோ தோண்டிக்கொண்டிருக்கிறார். சிறிய கடலுயிரினங்கள் சிலவற்றைத் தோண்டியெடுத்தேன். அவற்றைத் தோண்டியெடுப்பது கடினம்.

ஏனெனில் அது மென்மையானது. தோண்டியெடுக்கத் துவங்கினால் அது மறைந்துவிடுகிறது. மிகவும் கடினம். சுமார் ஒரு கையளவுடைய பெரிய clam ஒன்றைக் கண்டுபிடித்தேன். நான் கடற்கரையில் செல்லச் செல்ல, முன் பக்கத்திலுள்ள ஓர் இடத்தில் நீர் குமிழி ஒன்றைக் கண்டேன்.

அதைக் கவனமாகப் பார்த்த போது பெரிய clam ஒன்று மணலில் சுருங்கியதைக் கண்டுபிடித்தேன். பின்னர் அதை எடுத்துக்கொண்டேன். எனக்குப் பெரும் வெற்றி என்றார் சாங்வென். கடல் நீர் அளவு குறைந்த பின்னர், கடற் பாறைகளுக்கிடையில் தாழ்ந்த இடத்தில் கடல் நீர் இன்னும் உள்ளது.

இந்தத் தாழ்ந்த இடத்தில் நீர் அதிகமில்லை என்றாலும் இதற்குள்ளே ஒரு பெரிய உலகம் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, கடற்பாறையுடன் நெருக்கமாக இருக்கும் சிறிய கடலுயிர் வகை, சிப்பிக் கிளிஞ்சல் (oyster)முதலியவை உள்ளன. சிறிய கல் ஒன்றை நகர்த்திய பிறகு, குறுக்கே ஊர்ந்துசெல்லும் சிறிய நண்டை எளிதில் பிடிக்க முடியவில்லை என்றார் சாங்வென்.

சிறிய நண்டும் சிறிய சிப்பிக் கிளிஞ்சலும் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரக் கூடியவை என்றார் அவர். கடற்கரையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் மகிழ்ச்சியுடன் கடற்கரையின் சிறப்பை உணரலாம். சாங்வென் மேலும் கூறியதாவது,

பொதுவாக வார இறுதியில் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்று சிறிய கடலுயிரினங்களைப் பொறுக்குவோம் அல்லது கடலலையைப் பார்ப்பதோடு, கடல் அலையின் ஒலியையும் கேட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

கடலில் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலுள்ள மணல் மிகவும் மென்மையானது. இதற்கு மேல் மிதித்து நடப்பது மிகவும் சொகுசு. இதனால், இதர இடங்களைச் சேர்ந்த பயணிகளும் அடிக்கடி இங்கு வருவார்கள் என்றார் அவர். சாங் வென் சொன்னது சரி.

ஹையாங் கடற்கரை புகழ் பெற்றது. மீனவரின் வாழ்க்கையை உணரப் பயணிகள், நாள்தோறும் இவ்விடத்தில் உலாவுவது வழக்கம். கடற்கரையில் வெறுங்கால்களில் நடந்துசெல்லும் போது, மணல் மென்மையானது என்பதை உணர்வதோடு, தொலைவிலிருந்து வரும் கடல் அலை ஓசையும் காதுகளில் விழுகின்றது.

அத்துடன், வெண்ணிற கடல் அலைகள் கடற்கரையுடன் மோதும் அழகான காட்சியையும் கண்டுகளிக்கலாம். மிகவும் சிறப்பான காட்சி. சீனாவின் உள் பிரதேசத்தைச் சேர்ந்த அன்ஹுவெய் மாநிலத்தின் பயணி வூசன், மீனவரின் வாழ்க்கையை உணர இங்கு வருவது இதுவே முதல் முறை. அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியதாவது,

நாங்கள் அன்ஹுவெய் மாநிலத்திலிருந்து வந்திருக்கிறோம். இங்கு மிகவும் நன்றாக உள்ளது. இயற்கைக் காட்சி எழில் மிக்கது. மக்களும் நல் ஒழுக்கமுடையவர்கள் என்றார் அவர்.

இரவில் மீனவர்களின் வீட்டில் தங்கியிருப்பது, மிதக்கும் படகில் கடலில் கிடைத்த மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்பது, மீனவர்களைப் போல கடலில் மீன் பிடிப்பது என்பன, ஹையாங் உள்ளூர் அரசு ஏற்பாடு செய்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா நடவடிக்கை ஆகும். இது பயணிகளால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது.

ஹையாங் நகருக்குச் செல்ல வசதியான போக்குவரத்து உண்டு. சிங்தௌ,வெய்ஹைய், யென்தைய் ஆகிய 3 நகரங்களுக்கும் ஹையாங் நகருக்குமிடையில் பேருந்துகள் போய்வருகின்றன. வழியில் சுமார் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். மீனவரின் வீட்டில் சாப்பிடுவது தங்கியிருப்பது ஆகியவற்றுக்கு ஒருவருக்கு ஒரு நாள் செலவு சுமார் 100 ரன்மின்பி யுவான் மட்டும்.

ஹையாங் நகரில் சுற்றுலா வளம் அதிகம். மீனவரின் வாழ்க்கையை நேரடியாக உணர்வது தவிர, கடற்கரை குளிப்பிடம், golf சர்வதேச கிளப், சாவ் மலை வனப்பூங்கா, யுன்தின் இயற்கைக் காட்சித் தலம் ஆகிய சுற்றுலா நிகழ்ச்சிகளையும் பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.

தவிர, கடல் வெள்ளரி, இறால், கடல் நண்டு, clam உள்ளிட்ட கடல் உயிரின வகைகளும் அதிகமாக உள்ளன. அவற்றின் விலை அதிகமில்லை. கடல் உயிரின வகைகளைச் சாப்பிடுவதற்கு இவ்விடம் நல்ல இடம் ஆகும். நேயர்களாகிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், வருகை தாருங்கள்.