• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-20 17:14:01    
சீனப் பண்பாடு பற்றிய கருத்து

cri

விழுப்புரம் எஸ். பாண்டியராஜன் கடந்த செப்டம்பர் 19 நாள் ஒலிபரப்பான சீன பண்பாடு நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். சீனாவில் இந்திய சமையலறை வாசனை என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த முனுசாமி ஞானவேலு அவர்களை பற்றிக் கூறியது மிக மிக அருமை. மகௌவில் முதலில் நுழைந்த இந்தியர் இவர் என்பதை அறிந்தேன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் மகௌ பற்றி பார்த்தபோது தமிழர்கள் அங்கே அதிகம் பேர் உள்ளனர் என்பதை அறிந்தேன். மகௌவுக்குச் சென்றால் நட்புப்பாலம் நிகழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் பதிவு செய்யலாம் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து ஈரோடு காளியப்பம்பாளையம் ராகம் பழனியப்பன் எழுதிய செபடம்பர் 19ம் நாள் காலை ஒலிபரப்பான செய்தித் தொகுப்பு பற்றிய கடிதம். கிராமப்புறங்களில் விளையாட்டை மேம்படுத்துவது பற்றிய செய்தித் தொகுப்பு கேட்டென். சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 90 கோடி பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு முறையான விளையாட்டு உடற்பயிற்சி வழங்குவது பற்றிய அரசின் முடிவு பாராட்டுக்குரியது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு மக்களிடையில் விழிப்புஜோர்வை ஏற்படுத்தும் முயற்சி பற்றிய செய்தித் தொகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து மும்பை கோரேகாவுன் எஸ். ஞாஜோஜோதி எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் பூசணிக்காய் வடை செய்வது பற்றி அறிந்துகொண்டோம். மிகச் சுலபமான, சிக்கனமான இந்த உணவு சுவை மிக்கது என்பதால் நிச்சயம் மிக பிரபலமடையும். மேலும் பாலஸ்தீனத்தில் புதிய அரசு உருவாக்குவதில் எதிர்கொள்ளப்படும் சவால்களை பற்றிய கட்டுரை தெளிவாக விளக்கமாக அமைந்தது. எங்களின் உலகப் பார்வை இதன்மூலம் மேம்படுகின்றது என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து திருச்சி மணக்கால் இரா. அன்பழகன் எழுதிய கடிதம். மலர்ச்சோலை நிகழ்ச்சியின் மூலம் நேயர்கள் அதிக அளவில் தங்களது அறிவை வளர்க்க முடிகிறது. அறிவுப்பூர்வமான செய்திகளை கேட்கும்போது மறக்காமல் மனதில் பதிந்து விடுகிறது. பாயசத்தில் முந்திர், திராட்சை இவற்றைத் தேடி பிரித்து தின்பதுபோல சுவையான தகவல்களை தேர்ந்தெடுத்து எங்களுக்கு அளிக்கும் பி. லூசா அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் என்று எழுதியுள்ளார்