அடுத்த ஆண்டு, சீனக் கிராமப்புறங்களின் இடைநிலை மற்றும் துவக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும். தேவைப்படும் கட்டணம் அனைத்தும், நாட்டின் நிதி வரவுச் செலவுத் திட்டத்தில் சேர்கக்ப்படும். சீன நிதி அமைச்சர் Jin Ren Qing நேற்று பெய்சிங்கில் இவ்வாறு கூறினார். நேற்று நடைபெற்ற தேசிய நிதி பணிக் கூட்டத்தில் பேசிய அவர், 2006ம் ஆண்டு வசந்த கால பாடத் தவணை முதல், சீனாவின் மேற்கு பகுதியில் கிராமப்புறத்தில் கட்டாயக் கல்விக் கட்டணத்துக்கான காப்பீட்டு முறைமையின் சீர்திருத்தம் முதன்முதலில் செய்யப்படுகின்றது. கட்டாயக் கல்விக் கட்டத்தில் மாணவர்களின் கல்விக் கட்டணம் அனைத்தும் விலக்கப்படுகின்றது. அன்றி, பாடநூல் கட்டண விலக்கு, தங்கிப்படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு உதவித்தொகை வழங்குவது என்ற கொள்கை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவற்றின் மூலம் 4 கோடியே 88 லட்சம் மாணவர்கள் நன்மை பெற்றுள்ளனர். இது தவிர, இலவச பாடநூல்கள், சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் பணியையும் சீனா அடுத்த ஆண்டு ஆராயும்.
|